Wayanad Lok Sabha: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை.. 1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசம்.. சிபிஐ., பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.!
1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், வயநாடு மக்களவ்வை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
நவம்பர் 23, வயநாடு (Kerala News): 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி (Rahul Gandhi), இரண்டு மக்களவை தொகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டார். சட்டவிதிப்படி ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்ட நிலையில், வயநாடு (Wayanad Lok Sabha) தொகுதியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. Maharashtra Election Results 2024: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக?...210+ தொகுதிகளில் மாபெரும் முன்னிலை.!
பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) போட்டி:
மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட சட்டப்பேரவை தேர்தலுடன், வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் களமிறக்கப்பட்டார். இதனால் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. Assembly Poll Results 2024: பாஜக முன்னிலை.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. விறுவிறுப்பாகும் அரசியல்களம்.!
1.43 இலட்சம் வாக்குகள் முன்னிலை:
இந்நிலையில், பிரியங்கா காந்தி 2.40 இலட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து சிபிஐ., பாஜக வேட்பாளர்களும் களமிறங்கி இருந்த நிலையில், சுமார் 1.43 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலையில் இருக்கிறார். சிபிஐ வேட்பாளர் சத்யன் 56 ஆயிரம் வாக்குகளும், பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 31 ஆயிரம் வாக்குகளும் பெற்று பின்தங்கி இருக்கின்றனர்.