நவம்பர் 23, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை (Maharashtra Assembly Poll Results 2024) தேர்தல் ஒரே கட்டமாக (Election Results 2024) நடைபெற்ற நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அங்கு ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள்படி இரண்டு மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என தகவல் வெளியான நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தமட்டில் இழுபறி நீடித்து வருகிறது. Assembly Poll Results 2024: பாஜக முன்னிலை.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. விறுவிறுப்பாகும் அரசியல்களம்.!
பாஜகவே முன்னிலை:
மராட்டியம், ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி பாஜக முன்னணியில் இருக்கிறது. 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தபால் வாக்குகளில் இருந்து பாஜக முன்னிலையில் இருக்கிறது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 213 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 68 தொகுதியிலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னணி பெற்றுள்ளது. ஜார்கண்டில் பாஜக 37 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது. அங்கு பாஜக - முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நீடிக்கிறது.மஹாராஷ்டிராவில் ஆட்சிக்கு 150 தொகுதிகளும், ஜார்கண்டில் 41 தொகுதிகளும் தேவை என்பது குறிப்பிட்டக்கது.