IPL Auction 2025 Live

MH JH Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்.. வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

நவம்பர் 22, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின்றன.

மகாராஷ்டிரா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 66.05% வாக்குகள் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிரா தேர்தலில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகா யூதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 137 முதல் 157 வரையிலான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. Road Accident: விபத்தில் உயிருக்குப் போராடிய நபர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!

ஜார்க்கண்ட் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. முதல் கட்ட வாக்குப் பதிவில் 64.85%, 2-வது கட்ட வாக்குப் பதிவில் 67.59% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஜார்க்கண்டில், ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் ஜே.எம்.எம் தலைமையிலான இந்தியா கூட்டணி கவனம் செலுத்துகிறது. ஆனால் ஆளும் அரசை அகற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.