PM Narendra Modi's Oath: "நரேந்திர தாமோதர தாஸ் மோடி எனும் நான்" மோடி மந்திரம் அதிர., பிரதமராக பதவிப்பிரமாணம் செய்தார் நரேந்திர மோடி.!
18வது அமைச்சரவையை மீண்டும் வழிநடத்தும் பொறுப்பை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு காப்புரிமை பிரமாணம் செய்து வைத்தார்.
ஜூன் 09, புதுடெல்லி (New Delhi): 2024 இந்தியா தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய (NDA Alliance) ஜனநாயக கூட்டணி, மீண்டும் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அரசை நிர்வகிக்கும் ஆட்சிக்கட்டிலில் அமருகிற்து. பிரதமராக நரேந்திர மோடி ஜூன் 09ம் தேதியான இன்று இரவு 07:15 மணியளவில் பதவியேற்கிறார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் மோடி: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு (Narendra Modi Taking Oath as PM Of India) விழாவில் ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளை சார்ந்த பிரதமர்களும், அதிபர்களும் கலந்துகொள்கின்றனர். மொத்தமாக 8 ஆயிரம் சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் நிலையில், அவர்களின் முன்பு பிரதமர் பதவிபிரணம் மேற்கொள்கிறார். இந்த விழாவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரின் மகன், அதானி குழுமத்தின் உரிமையாளர் கெளதம் அதானி, நடிகர்கள் ரஜினிக்காத, ஷாருக்கான், அக்சய் குமார் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர். Israel Airstrike on Gaza: 4 பேருக்காக 200 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி தகவல்.. பகீர் விபரம் உள்ளே.!
பிரதமர் பதவியேற்பு விழா: தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட பல கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். தேசிய அளவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, ஜனதா தல் கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல, வங்கதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா தாஹல், மொரிசியஸ் அதிபர் முகம்மத் மியூஸு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, உட்பட பல நாடுகளின் அதிபர்கள், தூதர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிக்கர்ஜுனா கார்கே உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமராக பதவியேற்பு: கடந்த 2014ம் ஆண்டை தொடர்ந்து, 2019 மற்றும் 2024 தேர்தலில் அமோக வெற்றி அடைந்து பிரதமராக தொடர்ந்து 3 வது முறை நரேந்திர மோடி பொறுப்பேற்றார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பிரதமருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைத்து, ரகசிய காப்புரிமையையும் செய்து வைப்பார். அதனைத்தொடர்ந்து, பிரதமரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜேபி நட்டா, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
அமைச்சர்கள் விபரம் சுருக்கமாக: மொத்தமாக 36 அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என 72 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். இவர்களில் 43 பேர் மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்கின்றனர். புதிய முகங்களுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பதவிப்பிரமணத்திற்கு பின்னர் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். மத்தியில் அமைச்சரவையில் 5 சிறுபான்மையினருக்கு, 27 ஓபிசி, 10 எஸ்.சி., 5 எஸ்.டி பிரினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 11 பேர் கூட்டணிக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
பதவிப்பிரமாணம்: அவைக்கு வந்ததும் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இருக்கையில் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கீதத்திற்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அங்கு கூடியிருந்த பலரும் தேசிய கீதத்தை தங்களின் வாயார பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, "நான் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, இறைவனின் மீது ஆணையாக, இந்திய அரசின் பிரதமராக பொறுப்பேற்று, இந்திய அரசின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன்" என பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.