Jammu and Kashmir CM Omar Abdullah: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சரான உமர் அப்துல்லா.. இன்று பதவியேற்பு.!
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அக்டோபர் 16, ஸ்ரீநகர் (Jammu and Kashmir News): ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில், மாநிலங்களவை தேர்தல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 2014 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 65.52 சதவீதத்தை விட சற்று குறைவாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது.
இந்தியா கூட்டணி வெற்றி: இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் ஆம் ஆத்மி என்சிபி கட்சி வென்றன. இதையடுத்து, சட்டப் பேரவையில் தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். 5-Year-Old Girl Dies of Heart Attack: அதிர்ச்சி... சரிந்து விழுந்த 5 வயது சிறுமி.. மாரடைப்பால் பலியான சோகம்!
முதலமைச்சரான உமர் அப்துல்லா: ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல் கான்வென்டின் சென்டர் (SKICC) இல் இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லாவுக்கு (Omar Abdullah) ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் திமுக சார்பில் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.