PK Sekar Babu Talks: "மகள் முடிவின் வலியை மறந்துவிட்டேன்" - மகளின் காதல் திருமணம் குறித்து மனம்திறந்த அமைச்சர் சேகர் பாபு.!
அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதல் திருமணம் செய்தது குறித்து முதன் முறையாக தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார்.
ஜனவரி 3, சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை பட்டியலில் முக்கிய இடத்தை பூர்த்தி செய்துள்ள அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி தனது காதல் கணவர் சதீஷ் குமாருடன் (Minister PK SekarBabu Daughter JayaKalyani Married SathishKumar Issue) தற்போது வசித்து வருகிறார். இருவரும் தலைமறைவாக வசித்து வரும் நிலையில், அவ்வப்போது தனது தந்தையால் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆபத்து நேரலாம் என ஜெயகல்யாணி வீடியோ வெளியிட்டு வந்தார். கடந்த ஆண்டு காதலரை கரம்பிடித்த ஜெயகல்யாணி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளின் முடிவால் தொடக்கத்தில் பெரும் துக்கத்தில் இருந்த அமைச்சர் பி.கே சேகர்பாபு (P.K SekarBabu), பின்னாட்களில் முழுநேர பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தந்தையாக ஏற்பட்ட வருத்தத்தை விட்டு விலக தொடங்கினார். தற்போது வரை தனது மகளின் செய்திகள் தொடர்பாக எங்கும் பேசாத அமைச்சர், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அதுதொடர்பாக பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனியார் தொலைக்காட்சிக்கு தனது மனம்திறந்து பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், "எனது மகளின் திருமணம் என்பது அது ஒரு வலி. அந்த வலியை மறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவர்களின் வாழ்க்கை பாதையை தேர்வு செய்துவிட்டார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க. சமுதாயத்தில் பல்வேறு விசித்திரங்கள் நடக்கும். சமுதாயத்தில் எவையெல்லாம் நடக்கக்கூடாதோ அவையெல்லாம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கேன். அவைகளில் சில வார்த்தைகளும் கூட. ShareChat Trap: ஷேர்ஷாட் ஆக்டிவ் சிறுமிகள், பெண்கள் டார்கெட்.. 20 பெண்களின் 1000 ஆபாச படங்கள்.. சிதம்பரத்தில் பிடிக்கப்பட்ட இளைஞனின் பகீர் பின்னணி.!
நான் பாதுகாப்பான வாழ்க்கையை மகளுக்கு அமைத்து தரவேண்டும் என தந்தையாக நினைத்தேன். அந்த பாதுகாப்பான வாழ்க்கையை என்னால் அமைத்து தர இயலவில்லை. அவர்கள் தேர்வு செய்த வாழ்க்கைப்படி விட்டுவிட்டேன். எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
எங்களின் அன்றாட வாழ்க்கையை நாங்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறோம். அவர்களை பற்றி சிந்திக்கப்பதற்கு கூட எங்களுக்கு நேரம் இல்லை. பொதுவெளியில் எங்கும் இதுகுறித்து பேசியது இல்லை. நான் திறந்த புத்தகம் தான். ஒளிவு மறைவு என்பது எனக்கு கிடையாது. ஒரே பக்கம் தான் எனது வாழ்க்கை.
எனது மனைவியால் மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். எனது வாழ்க்கையின் பெரும்பங்கு எனது மனைவியால் மட்டுமே சாத்தியமானது. நான் இரவு 1 மணிக்கு வந்தாலும், என்னை நலமுடன் பார்த்துக்கொண்டு, எனக்கு முன்னாள் விழித்து என்னை கவனிப்பது அவர்தான். அவர் இல்லாமல் நான் இங்கு இல்லை.
எனது மனைவியின் குடும்பம் பெரியது. 12 பேருடன் பிறந்து இன்று 10 சகோதர-சகோதரிகளின் அன்போடு வாழ்ந்து வருகிறார். அவர் குடும்பத்தில் 7-வது உறுப்பினர் ஆவார். எனக்கு வீட்டால் பெரிய பிரச்சனை, எதிர்பார்ப்பு இல்லை. ரூ.50 கொடுத்தாலும் ரூ.500 கொடுத்தாலும் குடும்பம் நடத்துவார். எனது மனைவி இறக்க குணம் கொண்டவர். அவரால் இயன்ற உதவியை செய்தாலும், அவர் வெளியில் தெரியுமாறு செய்யமாட்டார். அமைச்சர் பதவி மக்களால் இறைவன் கொடுத்தது" என்று தெரிவித்தார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 3, 2023 08:14 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)