PM Modi on Union Budget 2024: '2047ல் வளர்ந்த பாரதம்' - மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு.! முழு விபரம் உள்ளே.!
தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைத்துள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு, இன்று தனது 18 வது மக்களவையின் முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
ஜூலை 22, புதுடெல்லி (New Delhi): 18 வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றியடைந்து, பாஜக தலைமையிலான அரசு மத்திய ஆட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி இருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டு இந்திய அரசை வழிநடத்தி வருகிறது. தற்போது, 2024 - 2025ம் ஆண்டுக்கான மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதியான இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், இந்தியாவே (Union Budget 2024) எதிர்பார்த்த பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. Guru Purnima & Sawan Month: உற்சகமாக குரு பூர்ணிமாவை கொண்டாடிய மக்கள்; சிவன்-பார்வதிக்கு பிடித்த மாதத்தையும் வரவேற்று மகிழ்ச்சி.!
2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கு:
அதனைத்தொடர்ந்து, இன்று காலை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் கொண்ட கூட்டத்தொடரானது இன்று முதல் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை ஆக்கபூர்வ வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது அவசியமானதும் ஆகும். 2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கினை அடையும் நோக்கிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை ஒட்டுமொத்த நாடுமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் 8% வளர்ச்சி:
மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும். இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து நடைபோடுகிறது. நாட்டு மக்களுக்கான தேவைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு என்பது அவசியமான ஒன்றாகும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் பொருளாதாரம் 8% வளர்ச்சியடைந்து இருக்கிறது. முன்னேறியிருக்கும் பொருளாதார நாடுகளை விடவும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது. இந்திய மக்களின் நலனுக்காக வரும் 5 ஆண்டுகள் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். எதிர்க்கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு, இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்" என கூறினார்.