Rs 2000 Currency Notes To Be Withdrawn: ரூ.2000 நோட்டுகள் இனி செல்லாது - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி.!
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி இனி ரூ.2000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மாற்றவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மே 19, புதுடெல்லி (New Delhi News): மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, "2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுபடி ஆகாது" என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கைக்கு பின்னர் மத்திய அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், சர்வதேச அளவில் பணமதிப்பீட்டு நடவடிக்கை என்பது மிகுந்த பாராட்டை பெற்றது. TN 11th Result 2023: அதிரடியாக வெளியானது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்.. முழு விபரம் இதோ..!
மேலும், கள்ள நோட்டுகள் ஒழியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 23ம் தேதி முதல் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், செப்டம்பர் 30 ம் தேதி இதற்கான இறுதி கெடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.