Pondicherry Shocker: கழிவறையில் விஷவாயு கசிந்து தாய், மகள், பேத்தி என 3 பெண்கள் பலி.. புதுச்சேரியில் சற்றுமுன் பதறவைக்கும் சம்பவம்.!
தாய், மகள், பேத்தி என 3 பேரின் உயிரை அடுத்தடுத்த நொடிகளில் விஷவாயு தாக்கி பறித்துள்ள சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. புதுச்சேரியை பதறவைத்துள்ள சோக சம்பவத்தின் முதற்கட்ட தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூன் 11, பாண்டிச்சேரி (Puducherry News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை (வயது 72). இவர் இன்று காலை கழிவறைக்கு (Gas Leak in Toilet) சென்றபோது, விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் மகள் காமாட்சி (55), தாயை மீட்கச்சென்று மயங்கி இருக்கிறார். இதனால் பதறிப்போன காமாட்சியின் 15 வயது மகள் பாக்கியலட்சுமியும் அலறியபடி மயங்கி இருக்கிறார்.
தாய்-மகள்-பேத்தி என மூவரும் அடுத்தடுத்து பலி:
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து பார்த்தபோது விபரீதம் புரியவந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவர்கள் மூவரும் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் செந்தாமரை மற்றும் காமாட்சி பலியானது உறுதி செய்யப்பட்டது. சிறுமி பாக்கியலட்சுமி மட்டும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிறுமிக்கு நடந்த தீவிர சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். Dharmapuram Adheenam Case: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரம்; ஆதீனத்தின் முன்னாள் நேரடி உதவியாளர் வாரணாசியில் கைது.!
அதிகாரிகள் தீவிர விசாரணை:
இதனிடையே, கழிவறை பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு இருந்த காரணத்தால், விஷ வாயு தாக்கி உயிரிழப்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. நிகழ்விடத்தில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளும் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கழிவறை வாய்களில் இருந்து வீடுகளில் விஷவாயு தாக்கி பலி ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:
இதனையடுத்து, முதற்கட்டமாக அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிட்ட அதிகாரிகள், கழிவுநீர் வாய்க்கால்களை உடைத்து வாயு மற்றும் கழிவுகளை வெளியேற்ற உத்தரவிட்டு இருக்கின்றனர். அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. இதனிடையே, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் விசாரணைக்காக நேரில் வந்துள்ளார். Kallakadal Warning Update: கடற்கரைக்கு மறந்தும் போயிடாதீங்கா; 8 அடி வரை உயரும் அலை - தென் கடலோரமாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!
பொதுப்பணித்துறை அதிகாரி பணியிடைநீக்கம்:
சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விஷவாயு கழிவறைக்கு சென்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், புதுநகர் பகுதி மக்கள் தற்காலிகமாக தங்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ள ஆட்சியர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.
அமைச்சர் விளக்கம்:
இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிடுவதாக புதுச்சேரி மாநில அமைச்சர் லட்சுமி நாரயாணன் உத்தரவிட்டுள்ளார். வீடு வீடாக அதிகாரிகள் சென்று ஆய்வு செய்த பின்னரே விஷவாயு வெளியேற்றத்திற்கான காரணம் தெரியவரும். மக்கள் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேற்படி விபரங்கள் களத்தில் இருந்து சேகரிக்கப்படுகின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)