Sudden Heart Attack Deaths in India: 175 பேரில் 100 பேருக்கு திடீர் மரணம்.. இந்தியாவில் நடந்த திடீர் மாரடைப்பு மரணங்கள்.. ஷாக் ரிப்போர்ட்.!

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் (Sudden Heart Attack Death) குறித்து NCRB அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Heart Attack (Photo Credit: Pixabay)

அக்டோபர் 02, புதுடெல்லி (New Delhi News): இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு தினமும் 175 நபர்களில் 100 பேர் மாரடைப்பால் உயிரிழந்து இருப்பதாக NCRB அறிக்கை தெரிவிக்கிறது. 100 பேரின் இறப்புக்கு மாரடைப்பு மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் தேசிய அளவில் 63,609 மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. சுமார் 45 முதல் 60 வயதுடைய நபர்கள் இதில் உயிரிழந்து இருக்கின்றார். மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இது தேசிய அளவில் சுகாதார ரீதியிலான நெருக்கடியை அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. LPG Cylinder Price: மாதத்தின் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை.. விலை உயர்வு.! 

மாரடைப்பு மரணங்கள்:

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் நடைபெறும் விபத்து சார்ந்த மரணங்கள், தற்கொலை விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் சேகரித்து அவ்வப்போது அறிக்கையாக வெளியிடுகிறது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டில் மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் 56,653 நபர்களும் உயிரிழந்து இருக்கின்றனர். உயிரிழந்த நபர்களில் எண்ணிக்கை ஆண்கள் அதிகம் ஆகும். மஹாராஷ்டிரா மாநிலத்தில் 21,310 நபர்களும், கர்நாடகாவில் 7,551 நபர்களும், கேரளாவில் 6,930 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வகையில் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆண்களே அதிகம்:

கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 53,310 ஆண்களும், 10,289 பெண்களும், திருநங்கைகள் 10 நபர்களும் உயிரிழந்துள்ளனர். 30 வயது முதல் 45 வயதுக்குள் இருக்கும் நபர்கள் இதய நோய் சார்ந்த பிரச்சனையால் இறந்துள்ளனர். வாழ்க்கை முறை, மரபியல் காரணி உட்பட பல காரணத்தால் மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டு இருக்கும் என அணிக்கப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement