SBI Increases Interest Rates on Fixed Deposits: ஸ்டேட் பேங்க் வங்கி பயனாளர்களுக்கு உற்சாக செய்தி; நிரந்தர வைப்புத் தொகை வட்டி விகிதங்கள் உயர்வு.!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு, நிரந்தர வைப்புத்தொகை செலுத்த நினைத்த பயனர்களுக்கு இன்பமான அறிவிப்பு ஒன்றை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டு இருக்கிறது.

State Bank of India (Photo Credit: Facebook)

டிசம்பர் 27, புதுடெல்லி (New Delhi): ஸ்டேட் பாங்க் ஆப் (State Bank Of India) இந்தியா தனது நிரந்தர வைப்புத் (Fixed Deposit) தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் ரூபாய் 2 கோடிக்கு கீழ் சேமிக்கப்படும் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதமானது இன்று முதல் (டிசம்பர் 27, 2023) முதல் அமலுக்கு வருகிறது.

பழைய வட்டி விகிதங்கள் உயர்த்தி அறிவிப்பு: ஒரு வருடத்திற்கு மற்றும் இரண்டு வருடங்களுக்கு குறைவான கணக்குகள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்பு தொகை கணக்குகளுக்கு, அனைத்து தவணைக்காலத்திலும் வட்டி விகிதம் தொடர்பான பழைய தொகைகளை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. IND Vs SA Test: இந்தியா - தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில், முதல் நாள் ஆட்டத்திலேயே 8 விக்கெட்டை இழந்த இந்திய அணி..! 

நிரந்தர வைப்புத்தொகை அடிப்படை புள்ளிகள் உயர்வு: அதன்படி, ஏழு நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் முதிர்ச்சி அடையும் டெபாசிட் தொகைகளுக்கு அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏழு நாட்கள் முதல் 45 நாட்கள் வரை உள்ள டெபாசிட் கணக்குகளுக்கு 3.50 விழுக்காடும், 46 நாட்கள் முதல் 129 நாட்கள் வரை 4.75 விழுக்காடும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 5.75 விழுக்காடு, 211 முதல் ஒரு வருடத்திற்கு ஆறு விழுக்காடும், ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை 6.80 விழுக்காடும், இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை ஏழு விழுக்காடும், மூன்று வருடங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை 6.75 விழுக்காடு நிரந்தர வைப்புத் தொகை வட்டி புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்களுக்கான கணக்குகள்: அதேபோல, மூத்த குடிமக்களுக்கும் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான வட்டி விகிதம் 4 விழுக்காடு முதல், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்பு தொகைகளுக்கு 7.5 விழுக்காடும் வழங்கப்படுகிறது. அனைத்து தவணைக்காலத்திலும் தலா 50 புள்ளிகள் வீதம் வட்டி விகிதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.