டிசம்பர் 26, கௌதெங் (Sports News): தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. தற்போது டெஸ்ட் தொடர் (IND Vs SA Test Series) நேற்று முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. தென்னாபிரிக்காவில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், நேற்று டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அடுத்தடுத்து இழக்கப்பட்ட விக்கெட்டுகள்: இதனையடுத்து, முதல் நாளில் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள், ஆட்டத்தின் முடிவில் 59 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 208 ரன்கள் மட்டுமே குவித்திருந்தனர். Tirumala Tirupati Devasthanams announcement: புத்தாண்டில் திருப்பதிக்கு அனுமதி இல்லை.. திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!
THAT moment when @klrahul got to his half-century in Centurion. 🙌🏽 #TeamIndia #SAvIND pic.twitter.com/6O6jibCJMk
— BCCI (@BCCI) December 26, 2023
இந்திய வீரர்களின் ரன்கள்: அணியின் சார்பில் விளையாடிய ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 17 ரன்னும், விராட் கோலி 64 பந்துகளில் 38 ரன்னும், ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 31 ரன்னும், கேஎல் ராகுல் 15 பந்துகளில் 70 ரன்னும், சர்துல் தாக்கூர் 33 பந்துகளில் 24 ரன்னும் அடித்திருந்தனர். கேஎல் ராகுல் (KL Rahul) மற்றும் முகமது சிராஜ் தற்போது களத்தில் இருக்கும் நிலையில், இரண்டு விக்கெட் மட்டும் எஞ்சி இருக்கிறது.
இன்று தென் ஆப்ரிக்க அணி பேட்டிங்: இரண்டாவது நாளான இன்று தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்யும் என்பதால், மூன்றாவது நாளில் ஆட்டம் விறுவிறுப்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் செயலிலும் நேரலையில் காணலாம்.