CoWIN Data Leaked?: கோவின் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரங்களை திருட்டுத்தனமாக வெளியிட்ட மோசடி கும்பல்?.. ஆதாரத்துடன் பரபரப்பு தகவல் அம்பலம்.!

தொழில்நுட்பம் வளர்ச்சிகண்டு நாம் முன்னேற்றம் அடைந்தாலும், அவற்றை தவறாக உபயோகம் செய்வோரின் திறமைக்கு ஈடாக அரசு செயல்பட்டு குற்றங்களை தடுக்காத வரை இணையவழி குற்றங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

Trinamool Congress Saket Gokhale | Cowin Data Leak Visual (Photo Credit: Twitter)

ஜூன் 12, மேற்கு வங்கம் (Kolkata): கடந்த கொரோனா பரவளின் போது உலகளவில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட நிலையில், மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் கோவிட்ஷீல்டு (Covid shield), கோவேக்சின், கோவின் (CoWIN), ஸ்புட்னிக் வி போன்ற பல்வேறு தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு இந்தியரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு, அவர்களின் தரவுகள் ஆதார் அட்டை (Aadhaar Card) மூலமாக ஆரோக்கிய சேது செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கோவின் தடுப்பூசி செலுத்திய பலரின் தனிப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவை Telegram செயலியின் மூலமாக Telegram Pot வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவின் தடுப்பூசி செலுத்திய நபர்கள், அவர்களின் குடும்பத்தின் விபரம், செல்போன் எண், ஆதார் நம்பர் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. Mango Dosa: மாம்பழத்தில் சுவையான தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?.. நாவில் எச்சில் ஊறவைக்கும் மாம்பழ தோசை.!

அதன்படி, கோவின் தடுப்பூசி செலுத்திய அரசியல்வாதிகளான ராஜ்யசபா எம்பி & திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் & கே.சி. வேணுகோபால், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிபன்ஷ் நாராயண் சிங், ராஜ்யசபா எம்பிக்கள் சுஷ்மிதா தேவ், அபிஷேக் மனு சிங்வி, சஞ்சய் ராவத் மற்றும்.,

இந்தியா டுடேயின் ராஜ்தீப் சர்தேசாய், மோஜோ செய்தி நிறுவன பத்திரிகையாளர் பர்கா தத், தி நியூஸ் மினிட்டின் தன்யா ராஜேந்திரன், டைம்ஸ் நவ்வின் ராகுல் சிவசங்கர் உட்பட பலரின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளன.

ஏற்கனவே தகவல் திருட்டு விஷயங்கள் இந்தியாவில் அதிகளவு நடைபெறும் நிலையில், ஆதார் போன்ற தனிநபர் அடையாள அட்டையின் விபரங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்த சம்பவங்கள் நடந்த நிலையில், தற்போது இதுவும் நடந்துள்ளது.

இதுகுறித்த விபரங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகெட் கோகலே (Saket Gokhale) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement