Mukul Roy Missing: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திடீர் மாயம்; குடும்பத்தினர் கண்ணீர்.. மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.!
தலைமை மீது கொண்ட வெறுப்பு காரணமாக கட்சியை பிரிந்து பாஜகவில் முக்கிய பொறுப்பை வாங்கிய ராய், மீண்டும் தாய்க்கழகத்தில் வந்து இணைந்துகொண்ட சூழ்நிலையில் மாயமாகியுள்ளார்.
ஏப்ரல் 18, கொல்கத்தா (West Bengal News): திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முகுல் ராய் (Mukul Roy). இவர் முன்னாள் இரயில்வே அமைச்சரும் ஆவார். இந்நிலையில், அவரின் மகன் சுப்ரக்ஷு (Subhragshu) நேற்று செய்தியாளர்களை சந்தித்து, தனது தந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காலை முதலாக எனது தந்தையை தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர் திங்கட்கிழமை டெல்லி செல்வதாக இருந்தது. டெல்லி விமான நிலையத்திற்கு அவர் 9 மணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை அவர் எங்களிடம் பேசவில்லை. அவரின் நிலை தெரியவில்லை என கூறியுள்ளார். Atiq Ahmed Issue: குடும்பமாக திரைப்பட பாணியில் உ.பி-யை அலறவிட்ட நிழலுலக தாதாக்கள்.. பதற்றத்தில் உ.பி; அசரவைக்கும் பின்னணி..!
இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முகுல் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பாஜகவில் (BJP) தன்னை இணைத்துக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பாஜக தலைமை முகுல் ராய்க்கு தேசிய துணைத்தலைவர் பதவியும் வழங்கியது. இதற்கிடையில், 2021 மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுவிட, பாஜகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்த முகுந்த் ராய், மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.