Central Law Minister: புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அர்ஜுன் ராம் மெக்வால்; கிரண் ரஜிஜூ-வுக்கு இலாகா மாற்றம்..!
அந்த வகையில், சட்டத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மே 18, புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தலைமையிலான அமைச்சரவை கடந்த 2014, 2019 தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டு முறையாக ஆட்சி நடந்து வருகிறது. 2014 தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சரவை சிறப்புடன் நடைபெற்று வந்த நிலையில், 2019ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அவ்வப்போது மத்திய அமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர்களின் பொறுப்பு துறையின் வளர்ச்சி சார்ந்து மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில், முன்னதாக சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ (Kiren Rijiju) புவி மற்றும் அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Jallikattu Pride of Tamilnadu: தமிழர்களின் வீர விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டது – பச்சைக்கொடி காண்பித்த உச்சநீதிமன்றம்; வெளியானது அதிரடி அறிவிப்பு..!
இதனையடுத்து, சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் (Arjun Ram Meghwal ) அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தனது பதவியை ஏற்றார். இவர் கூடுதலாக பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் காலச்சத்திற்கான இணை அமைச்சராகவும் பதவியற்றுவார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முக்கியமான அமைச்சகத்திற்கு அவர் பொறுப்பேற்று இருக்கிறார்.
புதிதாக சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அர்ஜுன், LLB மற்றும் MBA பயின்றவர் ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, மாவட்ட ஆட்சியராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். இறுதியில் காலத்தின் ஓட்டத்தால் அரசியலுக்கு வைத்த அர்ஜுனுக்கு ராஜஸ்தான் மாநில தாழ்த்தப்பட்ட மக்கள் அன்பு ஏகபோகமாக இருக்கிறது.