Ludo Love Crossed Border: லுடோ கேமில் காதல்.. இந்தியரை கரம்பிடித்த பாகிஸ்தானிய பெண்மணி பெங்களூரில் கைது.. எல்லைதாண்டி வந்து லிவிங் டுகெதர்.!

ஆன்லைன் விளையாட்டான லுடோ கேமில் சந்தித்த இந்தியரை காதலித்த பெண்மணி, பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக எல்லைதாண்டி வந்து இந்தியரை கரம்பிடித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளர். லிவிங் டுகெதரில் வாழ்ந்த காதல் ஜோடியை, கம்பிவைத்த சிறைக்குள் தள்ளிய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

Ludo Game Love (Photo Credit: Unsplash)

ஜனவரி 23, பெங்களூர்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்த் மாகாணம், ஹைதராபாத் (Hyderabad, Sindh Province, Pakistan) நகரை சேர்ந்த இளம்பெண் இக்ரா ஜீவனி (வயது 19). இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம் (UttarPradesh) மாநிலத்தை சேர்ந்தவர் முலாயம் சிங் யாதவ் (வயது 26). இவர்கள் இருவருக்கும் இடையே லுடோ ஆன்லைன் விளையாட்டில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, எப்போதும் லுடோ கேம் விளையாடும் பழக்கம் கொண்ட முலாயம் சிங்கிற்கும் (Mulayam Singh Yadav) - பாகிஸ்தானிய பெண்மணியான ஜீவனிக்கும் (Iqra Jeevani) இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, ஜீவனி நேபாளத்திற்கு (Nepal) வந்துள்ளார்.

அங்கு தனது காதலர் முலாயம் சிங்குடன் திருமணம் செய்த ஜீவனி, நேபாள - இந்திய எல்லையை போலியான ஆவணங்கள் கொண்டு கடந்து பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவுக்கு வருகை தந்துள்ளனர். அங்கிருந்து தம்பதிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு (Bangalore, Karnataka) வருகை தரவே, வருமானத்திற்காக எச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருக்கும் குடியிருப்பில் முலாயம் சிங் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். Rahul Gandhi ate Ice Cream: ஐஸ்கிரீமை காலி செய்த ராகுல் காந்தி.. “பாயசம் எங்கடா” காமெடி பாணியில் ஷாக்கான தொகுப்பாளினி.. சுட்டி செயலில் ராகுல்..!

Picture: Ludo Game

இந்த நிலையில், சட்டவிரோதமாக ஜீவனி இந்தியா வந்த தகவலை அறிந்த காவல் துறையினர் (Iqra Jeevani Entered Illegally in India), இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நேபாளத்தில் உள்ள காத்மாண்டு வந்த ஜீவனி, இன்று சிக்கி இருக்கிறார். இளம்பெண் குறித்த தகவல் பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் (Love Is Blind, But They Faced Border Issue) என்பது யாருக்கு எப்படி ஏற்படும் என்பது தெரியாது என்றாலும், வெளிநாடு வாழ் பெண்ணை காதலிக்கும் போது அவர் எந்நாடாக இருந்தாலும் சட்டத்தின் பால் உங்களின் காதல் சாத்தியமாகுமா? அதற்கு எப்படி அனுமதி பெறவேண்டும் என்பதை தெரிந்துகொண்டு சட்டப்படி ஒருவரை கரம்பிடிப்பதே சிறந்தது. மாறாக ஆர்வக்கோளாறில் பொய்யான தகவலை அளித்தால் விரைவில் கம்பி என்ன வேண்டியிருக்கும் என்பதற்கு மேற்கூறிய சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 01:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement