UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பெற்று சாதனை.!
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 16, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசின் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உட்பட பல்வேறு பணிகளுக்கான குரூப் ஏ, குரூப் பி தேர்வுகள் முன்னதாக நடைபெற்று முடிந்த நிலையில், அதன் முடிவுகள் இன்று மத்திய (UPSC Civil Servies) அரசு பணிகள் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான நேர்காணல் அனைத்தும் ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரையில் நடைபெற்றது. Rajinikanth Condolences Dwarakish: சூப்பர் ஸ்டார் படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!
ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்: இந்நிலையில், தற்போது தேர்வில் 1143 பேர் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடத்திலும், அனிமேஷ் பிரதான் இரண்டாவது இடத்திலும், அனன்யா ரெட்டி மூன்றாவது இடத்தையும் பெற்று அசத்தி இருக்கின்றனர். பொதுப்பிரிவில் தேர்வு எழுதியோரில் 474 பேரும், இடபிள்யு எஸ் பிரிவில் 115 பேரும், ஓபிசி பிரிவில் 303 பேரும், எஸ்சி பிரிவில் 165 பேரும், எஸ்டியில் 86 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். TN Weather Report: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வெற்றியடைந்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள்: இவர்கள் அனைவர்க்கும் 15 நாட்களுக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான மாநில வாரியாக பதவிகள் வழங்கப்படும். இதன் மூலம் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வன அலுவலர், பாஸ்போர்ட் அதிகாரி, ஜிஎஸ்டி அலுவலர் ஆகியோரும் நியமனம் செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வில் வெற்றியடைந்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.