Atiq Ahmed Issue: குடும்பமாக திரைப்பட பாணியில் உ.பி-யை அலறவிட்ட நிழலுலக தாதாக்கள்.. பதற்றத்தில் உ.பி; அசரவைக்கும் பின்னணி..!
திரைப்படத்தை போல அண்ணன்-தம்பி, மகன்கள், மனைவி என குடும்பமே தாதாவாக வலம்வந்த நிலையில், 3 பேர் கும்பலால் சகோதரர்கள் மருத்துவமனை வாசலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ள பதறவைக்கும் சம்பவத்தில் பரபரப்பு பின்னணி தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 17, ப்ரயாக்ராஜ் (UttarPradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் தாதாவாக இருந்தவர் ஆதிக் அகமத் (Atiq Ahmed). இவரின் சகோதரர் அஸ்ரப் (Ashrab). நிழலுலக தாதாவாக வலம்வந்த இருவரின் மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 2005ம் ஆண்டு அலகாபாத் நகரில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ பாலின் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர்களின் மீது மாநிலத்தின் பல மாவட்டத்தில் 160 குற்ற வழக்குகள் இருக்கின்றன.
சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ வழக்கில் ஆதிக் அகமத், அஷ்ரப் ஆகியோரை காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ப்ரயக்ராஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, பத்திரிகையாளர் போல வருகை தந்திருந்தவர்களில் 3 பேர் திடீரென ஆதிக் அகமத், அஸ்ரப் ஆகியோரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். Traffic Cop Drags: போக்குவரத்து காவலரை 10 கி.மீ தூரம் காரின் மேலே வைத்து ஓட்டிச்சென்ற போதை ஆசாமி; பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.!
மொத்தமாக 24 முறை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரையும் சுட்டு கொலை செய்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடாமல், துப்பாக்கிகளை கீழே வீசிவிட்டு ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு காவலர்களிடம் சரணடைந்தனர். இவர்களை காவல் நிலையம் அழைத்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல நாள் திட்டம் செயல்படுத்தப்பட்டது அம்பலமானது.
நிழலுலக தாதாவான ஆதிக், அஸ்ரப் ஆகியோரை சுட்டு கொலை செய்தது அருண் மௌரியா, சன்னிஸிங், லவ்லின் திவாரி என்பது உறுதியானது. இவர்கள் மூவரும் சிறுசிறு திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், மூவரும் சிறையில் நண்பர்களாகி இருக்கின்றனர். இவர்கள் மூவரும் நிழலுக தாதாக்களான ஆதிக், அஷ்ரப்பை போல மிகப்பெரிய தாதாவாக வேண்டும் என திட்டமிட்டு இருக்கின்றனர். அப்போது ஆதிக் சகோதரர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்துள்ளனர்.
இவர்களை கொலை செய்தால் நாம் பிரபலமாகலாம் என முடிவெடுத்த இவர்கள், ப்ரக்யாக்ராஜில் இருக்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி விபரங்களை சேகரித்துளள்னர். அவர்களின் திட்டப்படி ஆதிக் சகோதரர்களை மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து செல்லும் தகவலை தெரிந்துகொண்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் வைத்தே கொலை செய்ய திட்டமிட்டவர்கள், பத்திரிகையாளர் வேடத்தை தேர்வு செய்துள்ளனர். Jagadish Shettar: நேற்று பாஜக, இன்று காங்கிரஸ்.. முன்னாள் முதல்வரின் கட்சி மாற்றம் குறித்து கர்நாடக காங்., தலைவர் கருத்து.!
ஏனெனில் இருவரும் நிழலுலக தாதாவாக இருப்பதால் காவலர்கள் பாதுகாப்பு இருக்கும் என்பதால், பத்திரிகையாளர் வேடத்தினை கையில் எடுத்துள்ளனர். இதனையடுத்து, ஆதிக் சகோதரர்கள் வருவதை அறிந்துகொண்ட மூவரும் போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டை, மைக் போன்றவற்றை தயார் செய்து மருத்துவமனைக்கு சென்று நிருபர்கள் போல இருந்துள்ளனர்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஆதிக் அகமத் பதில் அழித்துக்கொண்டு வரும்போதே, அவர்களுக்கு பின்னால் இருந்த அருண் மௌரியா ஆதிக் ஆகமத்தின் பின் தலையில் சுட்டு இருக்கிறான். அருகில் இருந்தே சுட்டதால் ஆதிக் அகமது பின் தலையை துளைத்தவாறு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அடுத்த நொடியே அவரின் சகோதரரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
22 வினாடிகளில் 24 குண்டுகள் உடலை துளைத்து பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர், காவலர் என 2 பேர் படுகாயமும் அடைந்தனர். நிகழ்விடத்தில் சம்பவத்தை தடுக்க தவறியதாக பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் 17 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். TN Govt Announce Relief Fund: துபாயில் 2 தமிழர்கள் தீ விபத்தில் உயிரிழந்த விவகாரம்; ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு முதல்வர்.!
ஆதிக் அகமத் அம்மாநிலத்தில் உள்ள மேற்கு அலகாபாத் தொகுதியில் இருந்து 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், புல்பூர் பாராளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அகமத்தின் 5 மகன்களில் மூத்த மகன் உமர் மற்றும் இரண்டாவது மகன் அலி ஆகியோர் ஆட்கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கின்றனர். மூன்றாம் மகன் ஆசாத் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிற 2 மகன்களும் மைனர்களாக இருக்கும் நிலையில், அவர்களின் மீதும் குற்றவழக்குகள் இருப்பதால் சிறுவர் சீர்திருத்த சிறையில் இருக்கின்றனர். ஆதிக் அகமதுவுடைய மனைவி ஸாயில்தா பர்வீனின் மீதும் பல வழக்குகள் இருக்கின்றன. அவர் தலைமறைவாக இருக்கிறார். ஆதிக்கின் மறைவுக்கு பின்னர் அவரின் மனைவி சரணடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிழலுலக தாதாக்கள் கொல்லப்பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே அச்சத்தை தந்தாலும், தாதாக்களின் மறைவு நிம்மதியை அளித்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)