Viral Video: தற்கொலை செய்ய இரயில் தண்டவாளத்தில் தலைவைத்த இளைஞர்.. நேரில் பார்த்த பெண் காவலர் அசத்தல் செயல்.!
மனமுடைந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணி செயல்பட்ட இளைஞருக்கு, காவல் அதிகாரி மூலமாக மறுஜென்மத்திற்கான வாய்ப்பு கிடைத்தது.
ஜூன் 08, மேற்குவங்கம் (West Bengal News): மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள புர்பா மேதினிபூர் (Purwa Medinipur) மாவட்டத்தின் தலைநகரில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்திற்கு நேற்று இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
அவர் இரயில் நிலையத்தின் நடைமேடையை பார்த்தவாறு அங்கும் இங்குமாக சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். அவர் தண்டவாளத்தின் நடுவே இரயில் வருவதை பார்த்து தலைவைத்து படுத்துக்கொண்டார். Tenkasi Shocking Murder : “என்னோடு வா”.. அழைப்பு விடுத்த கள்ளக்காதலனை குடும்பத்தோடு சேர்ந்து தீர்த்துகட்டிய கள்ளக்காதலி..!!
பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராக இருந்த பெண் காவலர் ஒருவர் நடைமேடையில் அமர்ந்துகொண்டு இருந்த நிலையில், அவர் விரைந்து செயல்பட்டு நொடியில் இளைஞரின் உயிரை காப்பாற்றினார்.
அவரின் சாதுர்யத்தால் இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில், இரயில்வே பெண் காவலர் கே.சுமதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.