Man Stuck In Loo For Entire Flight: விமான பயணத்தில் மரண பயத்தை எதிர்கொண்ட பயணி: கழிவறை கதவுகள் பூட்டிக்கொண்டதால் பீதி..!
மும்பையில் இருந்து பெங்களூர் வந்த பயணிக்கு, பயணத்தின்போது நடந்த அதிர்ச்சிதரும் சம்பவத்தினை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜனவரி 17, பெங்களூர் (Bangalore): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூர் (Mumbai to Bangalore Flight) விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்ஜி 268 விமானம் பெங்களூர் வந்தது.
மூடிக்கொண்டு கழிவறை கதவுகள்: மும்பையில் இருந்து இரவு 10:55 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், 2 மணியளவில் பெங்களூர் வந்தடைந்தது. விமானத்தில் 14-டி இருக்கையில் பயணம் செய்து வந்த இளைஞர் ஒருவர் கழிவறைக்கு (Flight Toilet) சென்றதாக கூறப்படுகிறது. அச்சமயம், கழிவறையின் கதவுகள் எதிர்பாராத விதமாக கோளாறு காரணமாக உட்புறமாக தானியங்காக தாழிட்டு இருக்கிறது. PM Modi Puja at Guruvayur Temple: குருவாயூர் கோவிலில் தலைவணங்கி சாமி தரிசனம்: பிரதமர் நரேந்திர மோடி கேரள பயணத்தில் நெகிழ்ச்சி..!
இதனால் கழிவறைக்குள் சிக்கிய பயணி வெளியே வர இயலாமல் தவிர்த்து இருக்கிறார். விமான பணிக்குழுவினர் அவர் கழிவறைக்குள் சிக்கி இருப்பதை உறுதி செய்து, பெங்களூரில் இருக்கும் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பயணி பத்திரமாக மீட்பு: இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் விமான குழுவினர், தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் விரைந்து வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி, 100 நிமிடங்கள் கடந்து இளைஞரை மீட்டனர். அவரின் விபரம் தெரிவிக்கப்படவில்லை. விமான பயணத்தின்போது கழிவறைக்குள் சிக்கிய பயணி, உயிர் பயத்தில் பதறிப்போன நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.