Tips for Women: வெளியூரில் தனியாக வசிக்கும் பெண்களா நீங்கள்? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
தனிநபரான நமக்கு, நமது பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு என்ற எண்ணம் இருந்தால், உலகின் எந்த மூலைக்கும் சென்று நமக்கு தேவையான வெற்றியை அடைந்து வாகைசூடி வீட்டிற்கு வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டிசம்பர் 17, சென்னை (Chennai News): இன்றளவில் பணி நிமித்தம், கல்வி உட்பட பல காரணங்களுக்காக பெண்கள் வெளியூர்களில் தாங்கும் நிலை என்பது அதிகரித்துள்ளது. தங்களின் 15 முதல் 18 வயது வரை பெற்றோர், உள்ளூர் என வாழ்ந்து வந்த இளம்பெண்களுக்கு, வெளியூர் பயணமும், அங்கு தங்கும் நிலைகள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் இருக்கும். இவ்வாறான பெண்கள் தங்களின் தோழிகளுடன் அல்லது தனியாக மகளிர் விடுதி, வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதை விரும்புகின்றனர். இவை பாதுகாப்பானதாகவும் கருதப்படும்.
ஆலோசனை:
முன்னரே அறிமுகம் இருக்கும் நபரின் இடத்திற்கு சென்று வருவதில் பிரச்சனை இருக்காது எனினும், எந்த விதமான பின்புலனும் இல்லாமல் வெளியூர்களுக்கு வேலை/கல்வி நிமித்தமாக சென்று தங்கினால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளும் எழுந்துவிடும். இதனால் தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான சில எளிமையான ஆலோசனை குறிப்புக்கள், எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) நிறுவனத்தால் இணைக்கப்படுகிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
பாஸ்வேர்ட் மாற்றுங்கள்:
தனியாக வசித்து வரும் பெண்கள், தங்களின் வீட்டில் உள்ள தாழ்பாள், கதவுகள், ஜன்னல், பூட்டு, கிரில் போன்றவை பாதுகாப்பான நிலையுடன் உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக பயோமெட்ரிக் கதவுகள் என்றால், அவை சரி வர செயல்படுவதை உறுதி செய்து, அதன் புதிய பாஸ்வேர்ட் அமைப்பை செயல்படுத்த வேண்டும்.
கேமிரா அமைப்பை உறுதி செய்யுங்கள்:
புதிய வீட்டிற்கு சென்றால், அதன் பூட்டுகளை புதிதாக மாற்ற வேண்டும். வீட்டின் சாவி எளிதில் கிடைக்காத வண்ணம் இருக்க வேண்டும். வீட்டின் பாதுகாப்புக்கு கேமிரா, டோர் பெல், வீட்டினுள் இருந்து பார்க்கும் வசதிகள் இருக்கிறதா? என்பதை சோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். நாம் வெளியே சென்றாலும் கேமிரா உதவியுடன் அதனை நேரலையில் பார்க்கும் வண்ணம் அமைப்புகளை செயல்படுத்த வேண்டும். Margazhi Month 2024: மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
செல்லப்பிராணிகளை வளர்க்கலாம்:
பலருக்கும் நாய்கள் மீது பிரியம் இருக்கும். ஆகையால், பாதுகாப்புக்காக நாய்களை வளர்க்க விருப்பம் இருந்தால், அதற்கான அனுமதி இருந்தால், அதனையும் மேற்கொள்ளலாம். அக்கம்-பக்கத்தில் வசித்து வரும் நபர்களிடம், குறிப்பாக நம்பிக்கைக்குரிய பெண்களிடம் நட்பை ஏற்படுத்தலாம். வெளிநபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதை தவிர்க்கலாம். எதுவாக இருந்தாலும் வாசலோடு முடித்து அனுபவித்து நல்லது.
அவசர உதவி வழிகள்:
உங்களின் குடும்பத்தினருக்கு நீங்கள் இருக்கும் முகவரியை தெரியப்படுத்தலாம். அவசர அழைப்பு எண்களான மாநில காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100, தேசிய மகளிர் ஆணைய உதவி எண் 011-23237166, பெண்கள் உதவி எண் 181 ஆகியவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். Kavalan SOS போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து, அதனை செயல்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக ஆபத்து காலங்களில் ஸ்மார்ட்போனை சிலமுறை வேகமாக குலுக்கினால், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்கை சென்றுவிடும். அடுத்த 10 முதல் 15 நிமிடத்திற்குள் அதிகாரிகள் உங்களின் இருப்பிடத்திற்கு வந்துவிடுவார்கள். Health Tips: உங்களால் குளிரை தாங்க முடியலையா? என்ன பிரச்சனை?.. மருத்துவ வல்லுநர்கள் ஷாக் தகவல்.!
தனியாக இருக்கிறேன் என வெளியே சொல்ல வேண்டாம்:
உங்களின் இருப்பிட பகுதி பாதுகாப்பாக இருந்தாலும், சுற்றுப்புறத்தில் நோட்டம் வேண்டும். தனிமை வீடுகளை குறிவைத்து திருட்டு போன்றவையும் நடக்கலாம். இரவு நேரத்தில் வீதிகளில் நடப்பதையும் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் பயணம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தலாம். நான் தனியாக இருக்கிறேன் என்பதை, முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தெரிவிக்க கூடாது. அவர்களின் காதுகளில் கேட்கும் வண்ணமும் தோழிகளிடம் பேச வேண்டாம்.
தூரத்தை பொறுத்து இருப்பிடத்தை தேர்வு செய்யுங்கள்:
நீங்கள் வேலை காரணமாக அல்லது படிப்பு காரணமாக வெளியூரில் தனியாக அறை எடுத்து தங்க நேர்ந்தால், உங்களின் பணியிடம்/கல்வியிடத்திற்கும் - உங்களின் வீட்டிற்கும் உள்ள தொலைவை கருத்தில்கொள்ள வேண்டும். இங்கிருந்து அங்கு எளிதில் அணுகும் வகையில் பேருந்து, இரயில் சேவை கிடைக்குமா? பயண செலவு எவ்வுளவு? நேர விரயம் எப்படி? என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப வீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
உங்களின் பாதுகாப்புக்கு முடிந்தளவு நீங்களே பொறுப்பு என்ற வகையில், சில தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள் (Women's & Children Helpline Number):
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3
சைபர் க்ரைம் (Cyber Crime) தொடர்பான விவகாரங்களுக்கு புகார் அளிக்க: 1930