டிசம்பர் 16, சென்னை (Health Tips): இந்தியாவில், அரபிக்கடலில் கேரளாவில் தொடங்கும் தென்கிழக்கு பருவமழை, மேற்குத்தொடர்ச்சி மலைகளின் வழியாக பயணித்து வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. பின் இறுதியாக தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் பருவமழை வடகிழக்கு பருவமழையாக மாறி அக். பாதி முதல் டிசம்பர், ஜனவரி வரை தொடருகிறது.
பனிப்பொழிவு இருக்கும்:
பருவமழை முடிந்ததும் வடமாநிலங்களில் குளிரின் தாக்கம் என்பது தொடங்கிவிடும். குறிப்பாக நமது தமிழ் நாட்காட்டிபடி கார்த்திகை மாதத்தில் நமக்கு மழை இருக்கும். வடமாநிலத்தில் லேசான பனிப்பொழிவு தொடங்கி, பின் நம்மைப்போல மார்கழி, தை மாதத்தில் உச்சத்தில் பனிப்பொழிவு இருக்கும். இதனால் அங்கு மக்களுக்கு பாதுகாப்பான வசதிகள் வீடுகளில் முன்னெடுக்கப்படும்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
சாலைகளில் தங்கி இருப்போரின் நலனுக்காக, அரசின் சார்பில் பிரத்தியேக குளிர் பாதுகாப்பு முகாம்களும் அமைக்கப்படும். ஏனெனில், இமயமலையின் காற்று டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களை நேரடியாக தாக்கும் என்பதால், அங்கு உறைபனி அளவிலான சாத்தியக்கூறுகளும் ஏற்படும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் மழைக்காலம் நிறைவுபெறும் தருவாயை குளிர் பனி தொடங்கி உணர்த்தும்.
குளிரை தாங்க முடியாது:
இந்த குளிரை ஒவ்வொருவராலும், அவரின் உடல் திறனுக்கேற்ப தாங்க முடியும். சிறிய அளவிலான குளிரைக்கூட தாங்க இயலாதது, உடலில் இருக்கும் நோயின் அறிகுறி என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் பிரச்சனை எனவும் அவர்கள் விவரிக்கின்றன. அதாவது, வயதான, ஒல்லியான உடல் அமைப்பை கொண்ட நபர்களால், இயல்பான அளவு ஏற்படும் குளிரைகூட தாங்க இயலாது. Paracetamol Tablets: காய்ச்சல், தலைவலி என பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துறீங்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
கொழுப்பு & இதர விஷயங்கள்:
ஏனெனில், அவர்களின் உடலில் மிகமிக குறைந்த அளவில் கொழுப்புகள் இருக்கும். உடலில் ரத்தத்தில் கலந்து இருக்கும் கொழுப்பு, நமது உடலை சுற்றி பரவியுள்ள கொழுப்பு என்பது வெவ்வேறு ஆகும். இந்த தன்மை காரணமாக குளிரை தாங்க இயலும் நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதுதவிர்த்து இரத்தசோகை, பசியின்மை, அதிக குளிரால் ரத்தம் இறுகுதல், ஹைப்போதலாமஸ் சுரப்பி பிரச்சனை, தசைநார் வலி, நாட்கப்ட்ட நோய், உடல் கொழுப்பு குறைதல் போன்ற பிரச்சனை காரணமாகவும் குளிரை தாங்கும் திறன் மாறுபடும்.
தைராய்டு சுரப்பி செயல்:
மனித உடலில் வெப்பநிலை பல்வேறு அமைப்புகள் மூலமாக கட்டுப்படுத்தப்படும். மூளைக்கு அடியில் இருக்கும் ஹைப்போதலாமஸ் உறுப்பு, முன் கழுத்து பகுதியில் தைராயிடு சுரப்பி செய்தியை அனுப்பும். தைராயிடு சுரப்பில் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தை கண்காணித்து, அதிக கலோரி சக்தியை சேமித்து வைக்கும் வகையில் உத்தரவிடும். இவ்வாறான கலோரி உடலுக்கு சக்தியை வழங்கி உடல் சூடு ஏறுகிறது.
உடல் சூடு:
உடலில் ஒட்டியபடி இருக்கும் ரத்தம், உடல் சூட்டினை முழுவதும் பரப்புகிறது. இவை தவிர்த்து உடலில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பு உடலை பாதுகாக்கும். இந்த அமைப்பில் சரிவர செயல்பாடுகள் இல்லாமல் குறைந்தால், உடல் சூடு சமநிலையில் பிரச்சனை எதிர்கொள்ளும். அதிக குளிரில் விறைத்துப்போய் உடல் நடுக்கம் ஏற்படும் பட்சத்தில், உடலின் வெப்பம் இழக்கப்படுகிறது என அர்த்தம் ஆகும். இவ்வாறான தருணத்தில் பல அடுக்கு வெப்பம் தாங்கும் உடையை அணிந்து உடலை பாத்துக்கலாம்.
மருத்துவரை அணுகுவது நல்லது:
உள்ளங்கை மற்றும் பாதங்களை சூடேற்றும் விதமாக நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும். குழந்தைகள், வயதானவர்களாக இருந்தால் உடலோடு-உடல் உரசி அரவணைத்து இருந்தால், சில நிமிடத்தில் உடல் சூடாகிவிடும். இதிலும் குளிர் சரியாகவில்லை என்றால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சில நேரம் நமது கவனக்குறைவு மரணம் வரை கூட இட்டுச் செல்லும்.
குளிரில் இருந்து தப்பிக்க சில எளிமையான வழிமுறைகள்:
வீடுகளில் இருப்போர் வீட்டின் ஜன்னல், கதவுகளை மாலை 4 - 5 மணிக்கு மேல் சாற்றி வைப்பது, குளிர்ந்த காற்றின் வீட்டின் அறைகளை சூழ்ந்து வெப்பத்தை குறைக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளும். அதேபோல, காலை 7 மணிக்கு மேல் வீட்டின் கதவுகளை திறப்பது நல்லது. வெளியே சென்று வீட்டிற்கு வருவோர், பயணத்தின்போது காதுகளில் மப்ளர், குளிருக்கு உகந்த ஆடைகளை தேர்வு செய்து அணிவது நல்லது. குளிக்க, முகம், கை-கால் சுத்தம் செய்ய மிதமான சூடுள்ள நீரை பயன்படுத்தலாம்.
வீட்டுக்குள் விபரீதம் வேண்டாம்:
எக்காரணம் கொண்டு வீட்டில் / வீட்டிற்குள் சூடு வேண்டும் என, வீட்டினுள் விறகு அடுப்பால் சமைப்பது, வீட்டின் அறைகளை மூடி வைத்துக்கொண்டு குச்சிகளை கொளுத்தி குளிர்காய்வது மிகப்பெரிய உயிர் அச்சுறுத்தலுக்கு வழிவகை செய்யும். ஏனெனில், மூடிய வீட்டில் குச்சிகள் எரிந்து உண்டாகும் புகை, விரைவில் கார்பன் மோனாக்சைடாக மாறி உயிருக்கே உலை வைக்கும். இவ்வாறான துயரத்தால் பல உயிர்கள் வடமாநிலங்களில் குடும்பம்-குடும்பமாக காலியாகி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.