Beetroot Benefits & Dangerous: பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ.. தப்பி தவறியும் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடாதீங்க.!
இதில் இருக்கும் நார்சத்து குடல் பகுதியில் உருவாகும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
ஜூலை 10, ஆரோக்கியம் (Health Tips): நமது உடலின் ஆரோக்கியத்திற்கு விட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் என்பவை அவசியம். இவை பழங்கள் மற்றும் காய்கறிகளிடம் இருந்து உடலுக்கு கிடைக்கின்றன. இன்று பீட்ரூட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவாக இருக்கும் பீட்ரூட்டை பொறியாகவும், ஜூஸாகவும், பீட்ரூட் சாந்தமாகவும் நமக்கு பிடித்தவாறு எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்கள் வயிறு மற்றும் சரும நலனை பாதுகாக்கும்.
பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக இதில் இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். உடலை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் பீட்ரூட், உடல் வலிமையை அதிகரிக்கும். மறதி பிரச்சனையை தடுக்க நினைப்பவர்கள், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க நினைப்பவர்கள் பீட்ரூட்டை சாப்பிடலாம். Goldman Sachs: போடுடா சரவெடிய… 2075-ல் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா; வெளியானது அறிவிப்பு..!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது வயிற்றில் வளரும் சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க பீட்ரூட்டை சாப்பிடலாம். நமது உடலில் கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்புகள் பலவீனமடையும் பட்சத்தில், பீட்ரூட் சாப்பிட்டு வர எலும்பு சார்ந்த நோய்கள் சரியாகும்.
இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை சரி செய்ய, இருப்பு சத்து கிடைக்க, உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் கிடைக்க பீட்ரூட் நல்லது. இதில் இருக்கும் நார்சத்து குடல் பகுதியில் உருவாகும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செரிமான மண்டலம் வலுப்பெறும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். அதேபோல, சருமத்தில் ஏற்படும் சேதத்தையும் சரி செய்து, அதனை பளபளப்பாக்கும்.
ஹீமோகுரோமடோடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவோர், கல்லீரல் பிரச்சனை இருப்போர், குடல் குமட்டல் & காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், குறைந்த இரத்த அழுத்தம் உடையோர் பீட்ரூட்டை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டாம். விருப்பம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. உணவில் அவற்றை சேர்க்க விரும்பினாலும் அளவோடு சாப்பிடுவது சாலச்சிறந்தது.