Roja Benefits: உடல் சூடு, கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு அருமருந்தாக ரோஜா இதழ்; அசத்தல் டிப்ஸ் இதோ.!
இதனால் உடல்நலமும் முன்னேறும்.
மே 03, சென்னை (Health Tips): ஐரோப்பா, வட அமெரிக்கா, வடமேற்கு ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் பூத்து குலுங்கும் மலரான ரோஜா (Roja Flower), பலருக்கும் பிடித்தமான பூக்களில் ஒன்று. காதலின் அடையாளமாக விளங்கும் ரோஜா (Rose Flower), இன்றளவிலும் காதலர் தினத்தன்று பிரதானமாக விற்பனை செய்யப்படும் மலர்களில் ஒன்றாக இருக்கிறது. காதலர்களின் அடையாளமாக இருக்கும் ரோஜாவில், நமது ஊர்களில் விற்பனை செய்யப்படும் ரோஜாவுக்கு எப்போதுமே தனி மௌவுசு என்பது உண்டு. 7 Month Pregnant Girl Died: உதவாத அபாயசங்கிலியால் இரயில் பயணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; படிக்கட்டு பகுதியில் வாந்தி எடுத்து சோகம்..!
உடலை குளிர்ச்சியாக்க: இது காதலின் வெளிப்பாடாக மட்டும் இருக்காமல், தன்னகத்தே பல மருத்துவ குணங்களையும் கொண்டது ஆகும். ரோஜா இதழ் பார்க்க அழகுடன், கண்களை கவரும் வகையில் இருக்கும். இதில் இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் மருத்துவ குணம் உள்ளது. ரோஜாவின் இதழ் உடலில் இருக்கும் வெப்பத்தை சமநிலைப்படுத்தி, உடலை குளிர்ச்சியாக வைக்க உதவி செய்யும். மேலும், சரும எரிச்சல் மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவற்றையும் குறைக்கும். 3 People Died Extreme Heat: 104 டிகிரி செல்சியஸ் வெப்பம்; கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பலி..!
கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு மருந்து: இயற்கையாக உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவோர், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றை அடிக்கடி எதிர்கொள்வார்கள். அவர்களின் உடல்நலம் எப்போதும் சோம்பேறித்தனமாகவும், மந்தத்தன்மையுடனும் காணப்படும். இவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதனுள் ரோஜா இதழையிட்டு அந்நீரை குடித்து வர நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமாக மாறும். கர்ப்பப்பை சார்ந்த நோய்களை கொண்ட பெண்கள், ரோஜா இதழை சாப்பிடலாம். இதனால் கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். உடலும் இளமைப்படும். ரோஜா இதழை அரைத்து கெட்டித்தயிருடன் காலையில் சாப்பிட இரத்தமும் சுத்திகரிக்கப்படும்.