Green Chemical Peas: அச்சச்சோ.. என்னது இது?.. பச்சை நிற பட்டாணியில் பச்சையாக வெளியேறும் ரசாயனம்.. சாயம் பூசி விற்கும் கொடுமை.!

பொருட்களின் வசீகரத்தன்மைக்காக அவற்றில் சேர்க்கப்படும் ராசயங்கள் குறித்து தெளிவாக இருங்கள்.

Green Chemical Mixed Peas (Photo Credit: Twitter | YouTube)

மே 01, சென்னை (Health Tips): நாம் நமது உடலை ஆரோக்கியத்துடன் (Health Care) பாதுகாக்க, உடலின் நோயெதிர்ப்பு (Stamina) சக்தியை அதிகரிக்க தினமும் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். இவற்றில் நாம் அரிசி (Rice), கோதுமை, காய்கறி (Vegetables), தானியங்கள் போன்றவற்றை நமக்கு ஏற்றாற்போல எடுத்துக்கொள்கிறோம்.

இன்றளவில் மக்களின் அவசரம் மற்றும் போலியான விளம்பரங்கள் போன்ற கவர்ச்சி தன்மையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களும் மக்களின் உடல்நலனை நடந்து, தனது சுய இலாப நலனை நாடி வருகின்றனர். இதனால் பொருட்களின் தரம் என்பது கேள்விக்குறியாகிறது.

இந்த நிலையில், இன்றளவில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்களில் கூட அழகு மற்றும் பார்வைக்காக மெழுகு மற்றும் சாயங்கள் ஊற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் பட்டாணி விற்பனையில் சாயம் என்பது பல காலங்களாக தொடர்ந்து வருகிறது. Modi Govt Block 14 Mobile Messenger Apps: 14 மெசேஜிங் ஆப்-களை முடக்கியது மோடியின் தலைமையிலான மத்திய அரசு.. அதிரடி நடவடிக்கையின் பகீர் பின்னணி.!

உடலுக்கு கேட்டினை ஏற்படுத்தும் ரசாயனங்களை பச்சை நிறமாக பட்டாணிக்குள் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் மக்கள் சில நேரம் 12 மணிநேரம் ஊறவைத்து கழுவி உபயோகம் செய்கின்றனர். விபரம் தெரியாமல் வாங்கும் சிலர் கீழே போடுகின்றனர்.

இன்னும் சிலரோ எதையும் கண்டுகொள்ளாது நீரில் கழுவி சமைக்கின்றனர். இவ்வகையான குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதே, அழகுக்காக மெருகூட்டப்படும் காய்கறிகள் இயற்கையாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாயங்களை நாம் தெரிந்தே உண்ணவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

சமைக்க பயன்படும் காய்கறிகளோ, விரும்பி சாப்பிடும் பழங்களோ எதை வாங்கினாலும் கவனமாக செயல்படுத்த பட்சத்தில், நாம் ஆரோக்கியம் என்று சாப்பிடும் உணவுகளே நமக்கு எமனாகவும் மாறலாம். ஆகையால் மக்களே விழிப்புணர்வை ஏற்படுவது எம் கடமை என்றால், விழிப்புடன் செயல்படுவது உங்களின் கடமையும் கூட.