Thaipusam 2025: தைப்பூசம் 2025: பழனியில் குவியும் பக்தர்கள்.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

தைப்பூச திருநாளை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்தபடி வந்துகொண்டு இருக்கின்றனர். இதனால் பக்தர்ளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகிறது.

Palani Murugan Temple | Thaipoosam 2025 (Photo Credit: @JohnKen61229347 X)

பிப்ரவரி 10, பழனி (Dindigu News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில், தைப்பூசம் 2025 பண்டிகை நாளை (11 பிப்ரவரி 2025) சிறப்பிக்கப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான ஒன்றாக இருக்கும் பழனியில், முருகன் குடிகொண்ட நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் முருகனின் தரிசனம் கிடைத்தால் சகலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 2025 தைப்பூச பண்டிகைக்காக பக்தர்கள் பலரும் விரதம் இருந்து காவடி, அலகு என தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த பழனி நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளன. Thaipusam 2025: தைப்பூசம் வரலாறு., தைப்பூசம் 2025 எப்போது? விரத முறைகள், வழிபாடுகள், சிறப்புக்கள் என்னென்ன? முழு விபரம் இதோ.! 

கட்டண தரிசனம் ரத்து:

இந்நிலையில், இன்று முதல் வரும் 3 நாட்களுக்கு, பழனி கோவிலில் கட்டண தரிசன முறைகள் ரத்து செய்யப்பட்டு, பொதுதரிசனம் வாயிலாக மக்கள் அனுமதி செய்யப்படுவார்கள். பழனிக்கு வரும் 4 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் கோவில் நிர்வாகம் மற்றும் இந்து-சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனி பேருந்து நிலையம், இரயில் நிலையத்தில் இருந்து பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்ல சிறப்பு இலவச பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நாளை தைப்பூச திருவிழா தேரோட்டமும் நடைபெறவிருப்பதால், பழனியில் முருக பக்தர்கள் இலட்சக்கணக்கில் குவித்து இருக்கின்றனர். Thaipoosam Special: தைப்பூசம் 2025 - பழனி போக திட்டமா? சிறப்பு இரயில் சேவை அறிவிப்பு.! 

தைப்பூசம் 2022 அன்று எடுக்கப்பட்ட காணொளி:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

தைப்பூசம் தை பூசம் தைப்பூசம் 2025 தை மாதம் பழனி முருகன் கோவில் பழனி தைப்பூசம் தைப்பூசம் 2025 தேதி தைப்பூசம் நல்ல நேரம் பழனி கோவில் தைப்பூசம் பழனி கோவில் இந்து பண்டிகைகள் தமிழ்நாடு தமிழ்நாடு செய்திகள் பழனி தைப்பூசம் 2025 தேதி 2025 தைப்பூசம் எப்போது 2025 தைப்பூசம் தேதி தைப்பூசம் 2025 date தைப்பூசம் விரதம் Thaipusam 2025 Thaipusam Wishes in Tamil Palani Thaipusam 2025 Date Thaipusam Date Tamil Thaipusam 2025 Thaipusam 2025 in Palani Temple Thaipusam 2025 Palani Vadalur Thaipusam 2024 Thaipoosam 2025 Thaipoosam 2025 Date Time Thaipoosam Palani Temple Palani Thaipoosam 2025 Thaipoosam Date Time 2025 Palani Thaipoosam Arulmigu Dhandayuthapaniswamy Temple Dindigul Palani Temple Arulmigu Palani Temple Thaipoosam 2025 Date Tamil Thaipusam 2025 Date Time Tamil Today News in Tamil Today News Tamil Live News Tamil Southern Railway Special Train மதுரை மதுரை செய்திகள் திண்டுக்கல் பழனி மதுரை பழனி இரயில் பழனி மதுரை இரயில் Thaipoosam Special Train Booking Festival News Hindu Festivals Tamilnadu Thaipusam Tamil Date 2025 Thaipusam Wishes Text Tamil Thaipusam Wishes Thaipoosam Wishes Text in Tamil


Share Now