Egg Benefits: அடடே.. ஆயில் அதிரடி தகவல்.. முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவதால் இவ்வுளவு நன்மைகள்.!
30 முதல் 80 வயது வரை, 5 இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், முட்டை சேர்த்துகொள்வோரின் உடல்நலன் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.
நவம்பர் 07, சென்னை (Health Tips): நமது உடல்நலனை பாதுகாக்க, நாம் தினமும் சத்தான உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இன்று தெரிந்துகொள்ளலாம்.
தினமும் முட்டை சாப்பிடுவோருக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. இந்த தகவல் சீனாவை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வசித்து வரும் 30 வயது முதல் 80 வயது வரை உள்ள 5 இலட்சம் பேரிடம் நடந்த ஆய்வில், தினமும் முட்டை சேர்த்துகொள்வோரின் உடல்நலன் திறம்பட செயல்படுவது தெரியவந்தது. Diwali 2023 Celebration: குவியும் மக்கள் வெள்ளம்.. 18 ஆயிரம் காவல்துறையினரை பாதுகாப்புக்காக களமிறங்கிய சென்னை காவல்துறை.!
இவர்களுக்கு இதயநோய் ஏற்படும் அபாயம் 18% குறைந்துள்ளது. அதேபோல, பக்கவாத அபாயமும் 28% குறைந்திருக்கிறது. முட்டையில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு ஆபத்து எனினும், அதனை அளவுடன் நாளுக்கு ஒன்று என எடுத்து வருவது சாலைசிறந்தது.
முட்டையில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடலுக்கு நன்மைகளை செய்து ஆற்றலை வழங்குகிறது. முட்டை நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதால், நோய் எதிர்ப்பு அதிகரித்து உடல் நலம் பெறுகிறது.
முட்டையின் மஞ்சள் கரு எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கிறது. கண்புரை ஏற்படாமல் பாதுகாக்கிறது. முட்டையை சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப எடுத்துக்கொள்வது நல்லது.
ஒருசிலர் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக்கருவையும், வெள்ளைக்கருவை தவிர்த்துவிட்டு மஞ்சள் கருவையும் சாப்பிடுவார்கள். முட்டையை எப்போதும் வேகவைத்து, இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது.