Paracetamol Overdose and Risk: காய்ச்சலா? தலைவலியா? பாராசிட்டமால் மாத்திரை எடுப்பவரா நீங்கள்?.. பேராபத்து.. ஆய்வில் பதறவைக்கும் உண்மை.. விபரம் உள்ளே.!
மனிதர்களின் திடீர் உடல்நல கோளாறுகளை சரி செய்ய கண்டறியப்பட்ட மாத்திரையால், மிகப்பெரிய பக்கவிளைவு ஏற்படும் அபாயத்தை ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது.
பிப்ரவரி 21, இலண்டன் (Helath Tips Tamil): சிறிய அளவிலான தலைவலியா? காய்ச்சலா? கை-கால் வலியா? அசதியால் ஏற்படும் உடல்நல பிரச்சனையா? பிற உடல் பாதிப்புகளா? எதுவாக இருந்தாலும் இவன் இருக்கிறானே என பலரும் தேடும் ஒரே மாத்திரை பாராசிட்டமல். இதை உட்கொண்டு உறங்கினால், மறுநாள் காலையில் அனைத்தும் சரியாகிவிடும் இந்த எண்ணமானது இந்தியர்களிடையே மட்டுமல்லாது உலக அளவிலும் பல நாடுகளில் இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமல் மாத்திரையை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறலாம்.
கல்லீரல் பாதிப்பு (Paracetamol Overdose) அபாயம் அம்பலம்: உலகளவில் வலி நிவாரணையாக கருதப்படும் பாராசிட்டமல் மாத்திரை, தன்னகத்தே பல பக்க விளைவுகளை கொண்டுள்ளது என்பது சமீபத்திய ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்தது. இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில், கல்லீரல் பாதிப்பு பாராசிட்டமல் (Paracetamol Cause Lungs Problem) மாத்திரை வாயிலாக பிரதானமாக ஏற்படுவதாக முடிவுகள் தெரிய வந்துள்ளன. எலிகளுக்கு பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்ததை தொடர்ந்து, மனிதர்களுக்கு அம்மாத்திரைகளை வழங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. Women Loss Job after Eating Sandwich: மீதமிருந்த உணவை சாப்பிட்ட துப்புரவு பணியாளர் பணிநீக்கம்; நிறுவனத்தின் கறார் செயலால் போர்க்கொடி.!
ஆய்வில் பதறவைக்கும் முடிவுகள்: இந்த ஆய்வில் எலிகள் மற்றும் மனிதர்களிடையே அபாயகரமான நச்சுத்தன்மையை பாராசிட்டமல் மாத்திரை கல்லீரல் பகுதியில் வெளியிட்டு, அதன் வாயிலாக குணப்படுத்துவதற்கு கடினமான மற்றும் ஆபத்தான புற்றுநோயை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. மேலை நாடுகளில் கல்லீரல் செயலிழப்பு என்பது அதிகமாக இருந்த நிலையில், பாராசிட்டமல் மாத்திரை உட்கொள்பவர்களை தேர்வு செய்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்துள்ளன.
புற்றுநோய் அபாயம்: கல்லீரலில் இருக்கும் செல்களில் சரியான செயல்பாடுக்கு அதன் கட்டமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த கட்டமைப்பில் பாராசிட்டமல் ஏற்படுத்தும் விரிசல், செல் சுவரில் இருக்கும் செல்களுக்கு இடையே உள்ள இணைப்புகளை உடைத்து புற்றுநோயை உண்டாக்குகிறது. செல்களின் செயல்பாடு தடுக்கப்படுவதால் அது உயிரிழப்புக்கு கூட காரணமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. கல்லீரல் நோய் மட்டுமல்லாது புற்றுநோய் போன்ற பெரும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. மலிவு விலையில் எளிதில் கிடைக்கும் பாராசிட்டமால் மாத்திரை சர்வதேச அளவில் வலி நிவாரணியாக முதற்கட்டமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. Mosquito Coil Dangerous: அதிக நேரம் கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்குபவரா நீங்கள்?... அலட்சியமாக இருக்க வேண்டாம்.. ஆபத்து.!
மருத்துவர்கள் கோரிக்கை: இதனை அதிகளவு எடுத்துக்கொள்வது அல்லது தொடர்ச்சியாக அதனை உட்கொள்வது கட்டாயம் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பாராசிட்டமல் மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மாத்திரையால் எதிர்காலத்தில் எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் அவை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.