பிப்ரவரி 20, சென்னை (Health Tips): வீடுகளில் இரவு நேரங்களில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையில் இருந்து தப்பிக்க, தற்போது பெரும்பாலும் கொசுவர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வர்த்தி சுருள், வர்த்தி, திரவ மின்சாதன பொருட்கள் உட்பட சில வடிவங்களில் கிடைக்கிறது. இவற்றை எரியூட்டும்போது வரும் புகை உடலுக்கு தீங்கை விளைவிக்கும். கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் ரசாயன கலவையில், மனிதனுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறு உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களும் உள்ளன. தினமும் கொசுவர்த்தி ஏற்றி வைத்தவாறு, அப்புகையை சுவாசித்து உறங்கினால் நுரையீரல் அடைப்பு உண்டாகும். இதனால் சுவாச மண்டலம் பாதிக்கப்படும். Birds Dies by Freezing: நொடியில் மாறிய சீதோஷ்ணநிலை; உறைகுளிரில் இருந்து தப்பிக்க வழியின்றி பறவைகள் கொத்துக்கொத்தாக மரணம்.!
நுரையீரலை தொற்றுக்கு வழிவகுக்கும்: சருமத்தில் எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, நரம்பு மற்றும் மூளை பாதிப்பு, மூச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் அதிகரிக்கும். சிகிரெட் புகிளியால் ஏற்படும் பாதிப்பை போல, கொசுவர்த்தி புகையின் பாதிப்பும் நமது உடல் நலனை கேள்விக்குறியாக்கும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றை மூடிய நிலையில் வைத்துக்கொண்டு கொசுவர்த்தியை உபயோகம் செய்வது, அதில் இருந்து வரும் புகையை நேரடியாக நாம் சுவாசிக்க வழிவகை செய்யும். இவை நுரையீரல் சார்ந்த தொற்றை உருவாக்கும்.
எலுமிச்சை இலை போதும்: இவ்வாறான பிரச்சனையில் இருந்து விடுபட நாம் கொசுவலைகளை பயன்படுத்தி கொசுக்கடியால் இருந்து தப்பிக்கலாம். பூண்டு எண்ணெயை வீட்டில் தெளிக்க கொசு அண்டாது. அதேபோல, எலுமிச்சை சாறு, துளசி எண்ணெய், வெப்ப எண்ணெய் போன்றவற்றையும் உறங்கும் அறையில் தெளிக்கலாம். தினம் சமையலுக்கு பயன்படும் பூண்டின் உரித்த தோலை எரித்தும் கொசுவை விரட்டலாம். எலுமிச்சை மரம் வீட்டில் வைத்திருப்போர், அதன் இலைகளை பிடுங்கி லேசாக அரைத்து கை-கால்களில் தேய்க்க எலுமிச்சை மனம் கொசுக்களை விரட்டியடிக்கும்.