Nail Care Tips : உங்கள் நகம் அழகாக இருக்க வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க..!

அவற்றை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்.

Nail care (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 20, சென்னை (Chennai): கை மற்றும் கால்களின் அழகுக்கு காரணமே நகங்கள் தான். சிலர்க்கு நகங்கள் மிகவும் வலுவிழந்து வளர்ந்தவுடன் உடையும். இப்படிப்பட்ட நகங்களை அழகாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்றுவது குறித்து இங்கு பார்க்கலாம்.

நகங்களை அழகாக பராமரிப்பதற்கான டிப்ஸ்: உங்கள் நகங்கள் பளபளப்பாக மாற்ற, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து, அதில் 20-25 நிமிடங்களுக்கு நகங்களை மூழ்க வைக்கவும். பிறகு, உங்கள் கையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, பஞ்சுகளால் சுத்தம் செய்யவும். முதல் முறையிலேயே உங்கள் நகத்தின் வித்தியாசத்தைக் காண்பீர்கள். Dawood Ibrahim: தாதா தாவூத் இப்ராஹிமிற்கு விஷம்... பாகிஸ்தானில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு!

சமையலறையில் வேலை செய்பவர்களின் நகங்கள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவர்கள், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் 1-2 எலுமிச்சை பழங்களை பிழிந்து,அதில் 20-25 நிமிடங்களுக்கு நகங்களை மூழ்க வைக்கவும். உங்கள் கையை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம், நகங்களின் மஞ்சள் நிறம் குறையும்.

மேலும் பலரின் நகங்கள் மிகவும் வறண்டு காணப்படும். அவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பாதாம் எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால் நகங்கள் பளபளப்பாக கிடைக்கும்.