Diabetes Patients: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு மருந்தாகும் வெந்தயம்.. ஊறவைத்து சாப்பிட்டால் எக்கசக்க பலன்கள்.!

கடந்த 2015 ஆய்வுப்படி தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

FenugreekDiabetic Patients (Photo Credit: Wikimedia commons)

மே 10 , சென்னை (Health Tips): சர்க்கரை நோய் இன்றளவில் சிறுவயதுள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏற்படும் நோயாக மாறிவிட்டது. முந்தைய காலங்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை மட்டும் பாதித்துக்கொண்டு இருந்த நோய், இன்றைய மாறிவிட்ட உணவு கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கம் காரணமாக சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு என்பது குறையும். வெந்தயத்தில் இருக்கும் கோலக்ட்டோமேனான் நார்சத்து செரிமானத்தை தாமதம் செய்து கார்போஹைட்ரேட் & சர்க்கரை உறிஞ்சும் செயலை வயிற்றில் குறைத்து கொடுத்து, குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. Canada China: உளவு வேலைபார்த்த சீன அதிகாரிக்கு ஆப்படித்த கனடா; “எதிர்நடவடிக்கை இருக்கும்” – சீனா எச்சரிக்கை.!

அதேபோல, வெந்தயத்தில் இருக்கும் ஹைட்ராக்சி லியூசின் வேதிப்பொருள், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு மேம்படுத்தப்பட்டு, சர்க்கரை அளவு குறைக்கப்படுகிறது. கடந்த 2015 ஆய்வுப்படி மேற்படி தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெந்தயத்தில் இருக்கும் டிரைகோணலின் வேதிப்பொருள் இன்சுலின் திறம்பட செயல்படும்.

வெந்தயத்தை மென்று விழுங்குவது அல்லது 10 கிராம் அளவுள்ள வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவது நல்லது. வெந்தயத்தில் இருக்கும் சபோனின் வேதிப்பொருள் இரத்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவையும் குறையும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெந்தயத்தை தவிர்க்கலாம். கர்ப்பிணிகள் வெந்தயம் எடுத்துக்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.