Immanuel Sekaran: மறைக்கப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் வரலாறு.. கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன.?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 67-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் 11, பரமக்குடி (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் வட்டத்தை சேர்ந்த செல்லூர் எனும் கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதியன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் மற்றும் ஞானசௌந்தரி ஆகியோரின் மூத்த மகனாக பிறந்தவர் தான் இமானுவேல் சேகரன். இவர் தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார். 1942 ஆம் ஆண்டில் இமானுவேல் சேகரன் தனது 18 வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். சிறை தண்டனையின் காரணமாக அவருக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது.
இமானுவேல் சேகரன்: தாய்நாட்டின் மீது கொண்ட பற்றினால் 1945 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் மூன்று ஆண்டுகளும் சுதந்திர இந்திய ராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து பணிபுரிந்தார். 1952 ஆம் ஆண்டு ராமநாதபுர பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையை கருத்தில் கொண்டு ராணுவ பணியில் இருந்து வெளியேறினார். சமூகப் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார். National Forest Martyrs Day 2024: தேசிய வன தியாகிகள் தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
சமூகப் போராட்டங்கள்: ராஜாஜி குல கல்வியை கொண்டு வந்த போது அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினார். கிறிஸ்துவ பள்ளிகளுக்கு எதிராக போர் கொடி பிடித்த போது 'ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளை பள்ளிகளை நோக்கி புறப்படுங்கள்' என பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார். 1953இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தார். அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு நேரில் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டார். தீண்டாமைக்கு எதிராக பெட்ரமாக்ஸ் லைட் ஏந்தி ஒவ்வொரு ஊருக்காக சென்று ஆதரவாளர்களைத் திரட்டி நாடகங்கள் மற்றும் கூத்துகள் நடத்தி பரப்புரை செய்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க ஆரம்பித்தார்.
இமானுவேல் சேகரன் மீதான எதிர்ப்பு: 1957ஆம் ஆண்டு காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நல குறைவால் இறக்கிறார். அவரின் உடலை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல பல தடைகள் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வரைக்கும் இமானுவேல் சேகரன் கொண்டு சென்றார். பின்னர் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு மூதாட்டி உடல், சுமூகமாய் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இச்சம்பவத்தினால் இமானுவேல் சேகரன்க்கு உள்ளூரில் எதிர்ப்பு ஏற்படுகிறது. அதன் விளைவாக லாவி என்ற கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 42 பேர் கொல்லப்பட்டனர். Minister Udhayanidhi Stalin Pays Tribute To Immanuel Sekaran: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!
இம்மானுவேல் சேகரன் கொலை: இந்த கலவரத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதே ஆண்டு செப்டம்பர் பத்தாம் தேதி அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதை ஒடுக்கப்பட்டோர் சார்பாக இம்மானுவேல் சேகரனும் முக்குலத்தோர் சார்பாக ஃபார்வேர்ட் ப்ளாக் கட்சி தலைவர் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் அவர்களின் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் சிலரால் வெட்டி கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவத்தில் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையும் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு வேறு கருத்துகளும் சர்ச்சைகளும் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இது சில நேரங்களில் தென் மாவட்டங்களில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. இதனால் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விவகாரத்தை பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து விடுவர். ஆனால் இறுதியில் 33 வயது இமானுவேல் சேகரன் என்ற இளைஞனின் எழுச்சி பயணம் ஒரு கும்பலால் தடுக்கப்பட்டது தடுக்கப்பட்டது.
1957ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அவரது உடல் ராமநாதபுர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது மயானத்திற்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது. இதில் இருதரப்பு மோதியதில் 85 பேர் பலியாகினர். தொடர்ந்து தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தினை பட்டியலின சமுதாயத்தினர் குருபூஜையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)