International Cat Day 2024: "எகிப்தில் கடவுள்.. உண்மையில் ராஜா.." சர்வதேச பூனைகள் தினம்..!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8-ம் தேதி சர்வதேச பூனைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 08, புதுடெல்லி (New Delhi): கருப்பு, சாம்பல் நிற பூனை வீட்டில் நுழைந்தால் அது அதிர்ஷ்டம், வெளியே பயணம் மேற்கொள்ள கிளம்பும்போது பூனை இடது புறமாக சென்றால் அது நல்ல சகுணம், பூனை மூன்று முறை தன் காதை நக்கினால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்று எத்தனை, எத்தனையோ நம்பிக்கைகள் உள்ளன. இப்படிப்பட்ட பூனைகளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி சர்வதேச பூனைகள் தினமாக (International Cats Day) உலகெங்கும் கொண்டாடுகின்றனர்.
வரலாறு: பூனை இனத்தைப் பாதுகாக்கும் இலக்குடன் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் சர்வதேச பூனைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17 ஆம் நாளிலும், ரசியாவில் மார்ச் 1 ஆம் நாளிலும் பூனை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பூனை (Felix Catus) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஓர் அனைத்துண்ணி ஆகும். பூனைகள் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.
வழிபாட்டு விலங்கு: பூனைகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை. ஆனால், மனிதர்களுடன் நெருக்கமான உறவைப் பேணும். பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளை பொதுவாக வீட்டில் வளர்த்து வணங்கினர். பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடை செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. Vacation At Sea: உலகைச்சுற்றும் வாலிபனாக வலம்வர ஆசையா? உங்களுக்கான அற்புத தகவல் இதோ.. 135 நாடுகளுக்கு கடலிலேயே சுற்றுலா.!
வாழும் காலம்: பூனைகள் தங்களுக்குள் மற்றும் மனிதர்களுடன் பல்வேறு வகையான ஒலிகள், உடல் மொழி மற்றும் முகபாவனைகளைக் கொண்டு தொடர்பு கொள்கின்றன. 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், பூனையின் சராசரி ஆயுட்காலம் 15 வருடங்களாக இருந்தது.1995 ஆம் ஆண்டில் 9.4 ஆண்டுகள் உயர்ந்து, 2014 இல் 12 முதல் 15 ஆண்டுகளாக உயர்ந்தது. எனினும், பூனைகள் 40 வயது வரை உயிர் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகின் வயதான பூனையாக க்ரீம் பஃப் எனும் பூனை, 40 வயதில் இறந்தது.
சுவாரஸ்ய தகவல்கள்: பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன. பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடையவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாகச் சுத்தம் செய்யும். பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைக்காரர்களாக மாற்றுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)