ஆகஸ்ட் 15, சென்னை (Chennai News): சென்னை தலைமைச்செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். அப்போது 9 முக்கிய அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM Stalin Speech) சுதந்திர தின அறிவிப்புகளாக வெளியிட்டு இருந்தார். அதன் விபரங்கள் பின்வருமாறு காணலாம். Breaking: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்புத் திட்டங்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
சுதந்திர தினத்தை முன்னிட்டு 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் :
- மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் தொகை ரூ.22,000 ஆக உயர்த்தப்படும்.
- மாநில விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
- வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனாரின் வழித்தோன்றார்கள் தற்போது பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதிய தொகை ரூ.11,000 ஆக உயர்த்தப்படும்.
- இரண்டாவது உலகப் போரில் பங்கேற்று இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி தொகை ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
- இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றதால் கணவரை இழந்த கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி தொகை ரூ.8,000 ஆக்க உயர்த்தப்படும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்கு சென்னை மாதவரம் பகுதியில் ரூ.22 கோடி செலவில் தங்கும் விடுதி கட்டிடம் அமைக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு மலைப்பகுதிகளிலும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
- மாநில அளவில் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்கு மையம் அமைக்கப்பட்டு ஓட்டுநர் பயிற்சி மையம் விரிவாக்கம் செய்யப்படும். மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி பள்ளி புதிதாக தொடங்கப்படும்.
- பத்தாயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணைய வழி கற்றல் திறன் மேம்பாடு நவீன பயிற்சிகள் வழங்கப்படும்.