International Men's Day 2024: "நீ இருக்கும் வாழ்க்கை அழகாக இருக்கிறது" இன்று சர்வதேச ஆண்கள் தினம்..!

சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19-ம் தேதியன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர சர்வதேச நிகழ்வாகும்.

Men's Day (Photo Credit: LatestLY)

நவம்பர் 19, சென்னை (Special Day): ஒவ்வொரு வருடமும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தைகளாக, சகோதரர்களாக, கணவர்களாக, சக ஊழியர்களாக சமுதாயத்தில் சாதனை படைத்து வரும் ஆண்களின் பங்களிப்பு மற்றும் சாதனையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் (International Men's Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆண்களுக்கான நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வரலாறு: 1992-ம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தாமஸ் ஓஸ்டர் என்பவரால் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது சர்வதேச அளவில் கவனம் பெறவில்லை. பிறகு, 1999-ல் University of the West Indies in Trinidad and Tobago வில் வரலாற்று பேராசிரியர் ஜெரோமி டீலக்சிங் (Dr. Jerome Teelucksingh) என்பர் ‘ஆண்கள் தினம்’ கொண்டாட முன்னெடுப்பு எடுத்தார். இந்தியாவில் ‘சர்வதேச ஆண்கள் தின’த்தை வழக்கறிஞர் உமா செல்லா என்பவர் பிரபலப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவர். Astrology: 2025 ஆம் ஆண்டு அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

கவிதை:

அழத் தெரியாதவன் அல்ல

கண்ணீரை

மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

அன்பில்லாதவன் அல்ல

அன்பை மனதில் வைத்து

சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

வேலை தேடுபவன் அல்ல

தன் திறமைக்கான

அங்கீகாரத்தை தேடுபவன் ..

பணம் தேடுபவன் அல்ல

தன் குடும்பத்தின்

தேவைக்காக ஓடுபவன் ..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல

நேசிப்பவர்களின் முன்

குழந்தையாய் மாறுபவன் ..

காதலைத் தேடுபவன் அல்ல

ஒரு பெண்ணிடம்

தன் வாழ்க்கையை தேடுபவன் ..

கரடுமுரடானவன் அல்ல..

நடிக்கத் தெரியாமல்

கோபத்தை கொட்டிவிட்டு

வருந்துபவன்..

சிறந்த அப்பாவாக, அண்ணனாக, கணவனாக, மகனான இருப்பதை நினைத்து பெருமையோடு வாழ். இனிய வாழ்த்துகள்!