Miladi Nabi 2024: "இஸ்லாமிய நண்பர்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்கள்" புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று..!

மிலாடி நபி பண்டிகை இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இந்த பண்டிகை எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாக கொண்டாடப்பட்டு, பிறகு உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது.

Miladi Nabi (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 16, சென்னை (Festival News): இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகள் நாயகத்தின் (Mohammad Nabigal Nayagam) வாழ்க்கையை நினைவுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மிலாடி நபி (Miladi Nabi) கொண்டாடப்படுகின்றது. முகமது நபி, கி.பி. 570-ஆம் ஆண்டு ரபி உல் அவல் மாதத்தில், இஸ்லாமிய நாட்காட்டியின் 3-வது மாதத்தின் 12-ஆம் நாளில் மக்கா (Makkah) நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த பண்டிகை எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாக கொண்டாடப்பட்டு, பிறகு உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது. இந்த 2024-ஆம் ஆண்டு மிலாடி நபி திருநாள், செப்டம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிறை தெரியாததன் காரணமாக தற்போது செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.  World Ozone Day 2024: ஓசோன் அழிந்தால் என்ன நடக்கும்? இன்று உலக ஓசோன் தினம்.!

வாழ்த்துக் கவிதைகள்:

  • இந்த மிலாது நபி நன்நாளில், அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான ஆசிர்வாதமான வாழ்க்கையை நல்குவார் என வாழ்த்துகிறோம்.
  • ஈகரை இஸ்லாமிய உறவுகளுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் !
  • முகமது நபி சொல்லியிருக்கிறார்.. என் நாமத்தினால் யார் வாழ்த்துகளை அனுப்புகிறார்களோ அவர்கள் வாழ்த்தப்படுவார்கள்.
  • அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது.. அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது.. அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !
  • புண்ணிய நபியின் பிறந்த நாள் இன்று மீலாது.. புவியினில் அவரின்றி உயிரினம் எதுவும் வாழாது.. மறுமையின் நிழலும் சுகமும் எவர்க்கும் மீளாது !
  • மறுவிலா துயர்ந்து நிறைவினைப் பெற்றிவ் வுலகம் புரந்திட.. குறையற வாழும் குணத்தின் குன்றாய் இணையற, அவரைப் படைத்தான்.. இந்த அழகான நாளில், அல்லா தேசத்தில் அமைதியை நிலைநாட்டுவாராக.
  • இந்த புனித நாள் நம் மனங்களை ஞானத்தில் திளைக்கச் செய்து, மனங்களில் அமைதியை நிலை நாட்டட்டும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement