November 25 Special Day: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று..!
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
நவம்பர் 25, சென்னை (Special Day): பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சமூகத்தின் சரி பாதியான பெண்களை அடுத்த கட்டத்திற்கு கைதூக்கி விடுங்க என கேட்கவில்லை. முன் திசை நோக்கி முன்னேற தோழமையோடு கரம் பற்றுங்கள் என்பதே ஒட்டு மொத்த பெண் இனத்தின் எதிர்பார்ப்பு.
வரலாறு: இந்த தினத்திற்கு ஐ.நா. பொதுச்சபை கடந்த 1979ஆம் ஆண்டில் ஒப்புதல் கொடுத்தது. இதையடுத்து, 1981ல் இருந்து இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் கூட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் உலகெங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. Ladies Finger Benefits: "உச்சி முதல் பாதம் வரை" - அடிக்கடி உணவில் வெண்டைக்காய் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
விழிப்புணர்வு: இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களும் பெண் குழந்தைகளுக்கு எதிராக உள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று மெட்டா புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதனால் சைபர் கிரைம் குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் (Good Touch), கெட்ட தொடுதல் (Bad Touch) கற்பிப்பதை போன்று, ஆண் குழந்தைகளுக்கு Don't Touch என்று கற்பித்தல் வேண்டும்.