International Mind Body Wellness Day 2025: சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம்.. உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இத பண்ணுங்க.!

சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம் ஜனவரி 3 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 03, சென்னை (Special Day): ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 3 சர்வதேச மன உடல் ஆரோக்கிய தினமாக (International Mind Body Wellness Day) அனுசரிக்கப்படுகிறது. மன ஆரோக்கியமே, உடல் ஆரோக்கியத்தைக் கூறும் என்பர். உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட எளிதில் குணப்படுத்தலாம். ஆனால் மன ஆரோக்கியம் பாதிப்படைந்தால் அது உடல்நலம், சந்தோஷம், மனஅமைதி என அனைத்தையும் சிதைத்துவிடும். அதனால் மன நலத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் முக்கியமாகும். தினசரி சில பழக்க வழக்கங்களை மேம்படுத்தி மன ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.

உடல் சார்ந்த செயல்பாடுகள்:

மனம் சோர்வாகவோ அல்லது மன உலைச்சலில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளிவரவும் மனதை திடப்படுத்தவு, மனதின் ஆரோக்கியத்திற்கும், உடலை வலிமையாக்க வேண்டும். இது மனதையும் வலிமையாக வைக்கும். உடல் சார்ந்த செயல்பாடுகள் மனதை ஒரு நிலைப்படுத்தவும், எதிர்மறை எண்ணங்களை மனதிலிருந்து விலக்கி வைக்கவும், குறைந்தபடசம் 30 நிமிடம் உடல் சார்ந்த செயல்பாடுகளை தினசரி தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு, அல்லது நடனம் , தியானம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது. இது எண்டோர்பினை தூண்டி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவடுடன் மன உலைச்சலை சரி செய்கிறது. குளிருக்கு மதுபானம் அருந்தும் மதுபிரியர்களே.. மொத்தமும் முடிந்துவிடும் ஜாக்கிரதை.. ஆய்வில் பேரதிர்ச்சி தகவல்.!

ஸ்டே பாஸிட்டிவ்:

மன ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டுமெனில் சிந்தனை எப்போதும் நேர்மறையாக மட்டுமே இருக்க வேண்டும். பிடிக்காத அல்லது மறக்க நினைக்கும் எதிர்மறை நினைவுகளை திரும்ப திரும்ப யோசிப்பது மன ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும். உங்களை எப்போதும் பாசிட்டிவாக வைக்கும் செயல்களையும், சூழ்னிலையையும் உருவாக்கி கொள்ள வேண்டும். அதாவது நண்பர்களுடன் வெளியில் செல்வது, தினமும் நிகழ்ந்ததில் பிடித்த மொமெண்டை டைரியில் எழுதுவது, ஓவியம் வரைதல் போன்றவை மனத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைக்கும். இது மன ஆரோக்கியத்திற்கான முக்கியத் தூணாக உள்ளது. மேலும் அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் இருப்பது மன அமைதியை ஏற்படுத்தித்தரும்.

ஆழ்ந்த தூக்கம்:

எந்த ஒரு ஒரு செயல் செய்தாலும் அதில் முழு ஏடுபாடும் காதலும் இருக்கையில் தான், அதற்கான அர்த்தம் ஏற்படும் என்பார்கள். இது துக்க்கத்திற்கும் பொருந்தும். தூக்கமின்மை உடல் மன ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். இது மன ஆரோக்கியத்தை பாதிப்பதை விட உடலை பாதித்து விடும். நல்ல உடல் மற்றும் மனத்தை பராமரிக்க சரியான ஆழ்ந்த தூக்கம் வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் போன், லேப்டாப் போன்றவற்றை ஒதுக்கி விட வேண்டும். நல்ல இருட்டான இடத்தில் தூங்குவது நல்ல ஆழ்ந்த உறக்கத்தை தரும். தூக்கம் சரியாக வரவில்லை எனில், தினமும் உடற் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட வேண்டும். அல்லது தூங்குவதற்கு முன் 20 நிமிடம் நடக்கலாம். நல்ல தூக்கம் மனதை அமைதிப்படுத்தி சுறுசுறுப்பாக்கும். New Year 2025: புத்தாண்டில் செய்யக்கூடிய முதல் தவறு.. நம்மை அறியாமல் நாமே செய்வது என்ன?.. சுவாரஷ்ய தகவல்.!

உணவு முறை:

மனம் மற்றும் உடலை மேம்படுத்த நல்ல உணவு பழக்க முறைகளும் சத்தான உணவு முறையும் அவசியம்.மேலும் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடுவது சத்தான உணவுகளும் உடலை ஆரோக்கியமாக வைத்துவிடும். உடல் மனதை கவனித்துவிடும். மேலும் உடலில் நீர்சத்து குறைகையில் உடல் சோர்வாகும் உடல் சோகும் போது மனதில் எதிர்மறை எண்ணங்கள் குடியேறிவிடும். இதனால் எப்போதும் தங்கள் உடலை சோர்வாகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நோய்த்தொற்று வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலையும் மனதையும் சோர்வடையவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனம் திறந்து பேச வேண்டும்:

மனதை ஆரோக்கியமாக வைக்க தங்களுக்கு நெருக்கமானவரிடமோ அல்லது நண்பர்களிடமோ மனம் திறந்து அவ்வப்போது பேச வேண்டும். இது மனதை மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இன்றியும் வைக்கும். அனைத்தையும் பகிந்து கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் இல்லையெனில் அறிமுகம் இல்லாத நபரிடம் இணையத்தின் மூலமே பேசலாம். முடிந்தவரை தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் யாரிடமாவது பேசவது மன அழுத்தத்தை ஏற்படுத்தாது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் மனநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனைகள் பெறவும், அவர்களுடன் பேசுவது மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now