2025 (Photo Credit: PIxabay)

ஜனவரி 02, சென்னை (Festival News): உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதை போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்கள் இந்த புத்தாண்டு (New Year) ஜனவரி 1 ஆம் தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றுதான். நள்ளிரவில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வது வழக்கம்.

வரலாறு:

2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர். பின் ரோமானிய மன்னர்களில் ஒருவரான, நுமா போம்பிலியஸ் என்பவர், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்கள் வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. Health Tips: லிப்ஸ்டிக் பயன்படுத்துறீங்களா? உங்களுக்குத்தான் இந்த ஷாக் எச்சரிக்கை.. கவனமாக இருங்க.!

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். மேலும் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக, 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவியது. கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது. கிரிகோரியன் காலண்டர் முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலக மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புத்தாண்டு பிறந்த முதல் மற்றும் கடைசி நாடுகள்:

அந்த வகையில் நேற்று 2025ஆம் ஆண்டு பிறந்தது. பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன்முதலாக புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணி என்றால், இவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகும். தொடர்ந்து, ரஷ்யாவின் ஒரு பகுதி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா, அடிலைய்டு, புரோக்கன் ஹில், செடுனா, பிரிஸ்பேன், போர்ட் மோர்ஸ்பை, ஹகத்னா, டார்வின், அலைஸ் ஸ்பிரிங்ஸ், டெனண்ட் கிரீக், ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல்மட், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்றன. Happy New Year 2025: "மகிழ்ச்சியுடன் வாழ 2025 ஆண்டு வழி வகுக்கட்டும்" - புத்தாண்டு பண்டிகை 2025 வாழ்த்துச் செய்தி இதோ..!

இந்திய நேரப்படி சிகாகோவில் காலை 11.30 மணி, யரிஜோனாவில் 12.30 மணி, அலாஸ்கா மதியம் 2.30 மணி, ஹவாலியில் பிறப்கல் 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டன. இந்திய நேரப்படி ஜனவரி 1, காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை மார்கொயஸாஸ், அமெரிக்கன் சமோவா ஆகிய நாடுகள் புத்தாண்டை கொண்டாடின.. அதேபோல, ஜனவரி 1, மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டை கொண்டாடியது. இது தான் புத்தாண்டு பிறந்த கடைசி நாடாகும்.

புத்தாண்டில் செய்யக்கூடிய முதல் தவறு:

பொதுவாக புத்தாண்டில் நாம் அனைவரும் ஒரு தவறு செய்வோம். அதுதான் வருடம் மாற்றி எழுதுவது. 2025 வருடத்திற்கு பதிலாக 2024 என எழுதி, பின்னர் 2025 என மாற்றுவோம். இதற்கு காரணம் நமது மூளை தான். கடந்த 30 நாட்களாக 2024 ன்னு எழுதிப்பழகி, சிலருக்கு அதுவே மூலையில் சமிக்கையாக நின்று இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதனால் ஏற்படும் விளைவு இது. ஒருசிலர் இயல்பாகவே அவ்வாறான நிலைகளை கடந்து இருப்பார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே இந்த புத்தாண்டில் அந்த தவறை செய்யாமல் சரியாக எழுதுங்கள்.