ஜனவரி 03, திட்டக்குடி (Health Tips): தமிழ்நாட்டில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பருவமழையின் விடைபெறும் நாளும் சேர்ந்து குளிருடன் மக்களை நடுநடுங்க வைக்கும். இவ்வாறான சமயங்களில் ஆன்மீக விழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் களைகட்டும். குறிப்பாக ஸ்ரீ முருகன், ஸ்ரீ ஐயப்பன் உட்பட பல தெய்வங்களுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பயணம் மேற்கொள்வார்கள். இதில் மார்கழி, தை மாதங்களில் கடுமையான பனி, மலைப்பிரதேசங்களில் உறைபனி சூழல் நிலவும். தென்கோடியில் இருக்கும் நமக்கே இந்த நிலைமை என்றால், இமயமலை சாரலில் இருக்கும் இந்தியாவின் வடமாநிலங்களில் நிலைமை குளிர்காலங்களில் மேலும் கவலைக்கிடம்தான். Bun Halwa Recipe: மதுரை ஸ்பெஷல் பன் அல்வா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
கட்டிங் போட்டா சரியாகிடுமா?
இந்நிலையில், வாட்டி வதைக்கும் குளிரில் இருந்து தப்பிக்க, மதுபோதை பிரியர்கள் மற்றும் சிகிரெட் விரும்பிகள் எப்போதும் கையில் தம்முடனும், பாட்டிலுடனும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் ரம், விஸ்கி போன்ற மதுவகைகளுடன் சிக்கன் போன்ற துரித உணவை ருசித்து மதுவை குடிக்கின்றனர். எவ்வுளவு குளிராக இருந்தாலும் கட்டிங் / போட்டால் சரியாகிவிடும் என்பது குடிமகன்களின் தாரகமந்திரம் போலவும் இருக்கிறது. மது உண்மையில் உடலின் வெப்பத்தை அதிகரிக்குமா? குடிகாரர்களின் கட்டுக்கதையில் உண்மை இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.
குளிர்காலத்தில் மதுவால் ஏற்படும் பிரச்சனை:
இந்த விஷயத்திற்கு ஆய்வாளர்கள் தரப்பில் கூறுவதாவது, "மதுபானம் வெப்பமயமாதல் விளைவை கொண்டுள்ளது. உடல் முழுவதிலும் மதுபானத்தால் வெப்பத்தை அதிகரிக்க இயலாது. மதுவால் தோலுக்குள் இருக்கும் இரத்த நாலாம் திறக்கப்படும். அதில் அதிக ரத்தம் பாயும். இதனால் தோல் பகுதியில் சூடான உணர்வு உண்டாகும். இந்த சூடான உணர்வை மது உடலை சூடாக்குகிறது என்ற பெயரில் தவறாக புரிந்து வைத்துள்ளனர். உடலின் முக்கிய உறுப்புகளில் இருந்து ரத்தம் திசைமாறும் என்பதால், உடலின் மைய வெப்பநிலை என்பது குறையும். இதனை சரிவர கவனிக்காத பட்சத்தில், உடல் தாழ்வான வெப்பநிலைக்கு சென்றுவிடும். கடுமையான குளிர்காலத்தில் மதுபானம் ஆபத்தையும் விளைவிக்கும். மதுபானம் குளிர்ந்த காற்றின் வெப்பநிலை தொடர்பான உணர்வை உடலில் குறைக்கும். இதனால் குளிர்காலத்தில் மது என்பது குடிப்போரை ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. முடிவெடுக்கும் திறனை கட்டுப்படுத்தி, பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்" என தெரிவிக்கின்றனர்.