Republic Day 2025: "வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முக கலாச்சாரமும்" 76-வது இந்திய சுதந்திர தினம் - அழகான குடியரசு தின வாழ்த்துச்செய்தி இதோ.!

இந்தியாவின் 76வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

Republic Day (Photo Credit: Team LatestLY)

ஜனவரி 24, புதுடெல்லி (New Delhi): ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் அரசியலமைப்பு (Constitution of India) நடைமுறைக்கு வந்ததை குறிக்கிறது. குடியரசு தினம் 2025 (Republic Day 2025) கொண்டாட்டத்தின் கருப்பொருள் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் இந்தியா - ஜனநாயகத்தின் தாய் ஆகும். இந்தியா தனக்கான சட்டங்களை இயற்றி அதை செயல் ஆக்கத்திற்கு கொண்டு வந்த நாளே குடியரசு தின நாள் ஆகும்.

குடியரசு தினத்தின் வரலாறு (Republic Day History):

டிசம்பர் 12, 1946 ஆம் ஆண்டு நிரந்தர அரசியல் அமைப்பை உருவாக்க பி ஆர் அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) தலைமையில் வரைவு குழு உருவானது நவம்பர் 4 1947 இல் அரசியலமைப்பு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் எழுதி முடிக்கப்பட்டது. இறுதியாக ஜனவரி 24, 1950ல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று ஜனவரி 26, 1950ல் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதை அன்றிலிருந்து இன்று வரை குடியரசு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. Republic Day 2025: இந்தியாவின் 2025 குடியரசு தின விழா 76ம் ஆண்டா? 77 ஆ?? விபரம் இதோ..!

குடியரசு தின அணிவகுப்பு (Republic Day Parade in Delhi):

நாட்டின் தலைநகரமான புது டெல்லி ராஜ்பாத்தில் இந்திய பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டை காத்து மறைந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, முப்படையினரின் அணிவகுப்பையும் இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பையும் பார்வையிடுவார். அதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில ஆளுநர் கொடியேற்றி மாநில காவலர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். அந்த வகையில், வாகன அணிவகுப்பில் இந்தாண்டு ஆந்திர பிரதேசம், பீகார், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் கலந்துகொள்ளுகிறது. மேலும் 11 மத்திய அரசின் குழுக்களும் பங்கேற்கின்றன.

பொற்கால இந்தியா: பாரம்பரியம் மற்றும் மேம்பாடு (Swarnim Bharat: Virasat aur Vikas) என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களின் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிப்பளிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாகன அணிவகுப்பு நடைபெறும். மேலும் கடந்த ஆண்டு நாட்டிற்காக சேவை புரிந்தவர்களுக்கு முக்கிய விருதுகளும் வழங்கப்படும்.

குடியரசு தின வாழ்த்து (Republic Day Wishes 2025 Tamil):

ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

Republic Day (Photo Credit: Team LatestLY)

இந்த குடியரசு தினத்தில் நம் நாடு செழித்து பிரகாசிக்கட்டும். சக இந்தியர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

Republic Day (Photo Credit: Team LatestLY)

இந்தியன் என்பது நம் பெருமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் மகிமை, நம்மை பிரித்து சிறுமைப்படுத்தும் தீய சக்திகளை வேரறுத்து இந்தியன் என்று பெருமை கொள்வோம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Republic Day (Photo Credit: Team LatestLY)

எத்தனை மொழி, எத்தனை மதம், எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பாரத்தாயின் பிள்ளைகள் தான். வாழ்க மக்கள் வளர்க பாரதம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Republic Day (Photo Credit: Team LatestLY)

செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட அழகான நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம்… குடியரசு தின வாழ்த்துக்கள்

தாய் மீதான பாசம் போன்ற தாய் நாட்டின் மீதான பாசமும். தாயை நேசிப்போம்! தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்… வந்தே மாதரம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

எண்ணங்களில் சுதந்திரமும்… இதயத்தில் அமைதியும்… நினைவுகளில் வரலாறும் நிறைந்திருக்கும் இத்தருணத்தில் தாய் மண்ணை உன்னை வணங்குகிறேன்

நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என உறுதிமொழி ஏற்போம்… குடியரசு தின வாழ்த்துக்கள்

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now