ஜனவரி 24, புதுடெல்லி (New Delhi): ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் அரசியலமைப்பு (Constitution of India) நடைமுறைக்கு வந்ததை குறிக்கிறது. குடியரசு தினம் 2025 (Republic Day 2025) கொண்டாட்டத்தின் கருப்பொருள் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் இந்தியா - ஜனநாயகத்தின் தாய் ஆகும். இந்தியா தனக்கான சட்டங்களை இயற்றி அதை செயல் ஆக்கத்திற்கு கொண்டு வந்த நாளே குடியரசு தின நாள் ஆகும்.
குடியரசு தினத்தின் வரலாறு (Republic Day History):
டிசம்பர் 12 1946 ஆம் ஆண்டு நிரந்தர அரசியல் அமைப்பை உருவாக்க பி ஆர் அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) தலைமையில் வரைவு குழு உருவானது நவம்பர் 4 1947 இல் அரசியலமைப்பு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் எழுதி முடிக்கப்பட்டது. இறுதியாக ஜனவரி 24 1950ல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று ஜனவரி 26, 1950ல் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதை அன்றிலிருந்து இன்று வரை குடியரசு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. Pregnancy Symptoms: கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன? விபரம் உள்ளே.!
ஆனால் இந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்திய குடியரசு தினம் எத்தனையாவது வருடம் என்பதில் சிறிது குழப்பம் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதால், நாம் இப்போது கொண்டாடும் குடியரசு தினம் 76வது கொண்டாட்டமாகும். இந்தியா குடியரசு அடைந்ததன் 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கிறது. மேலும் 76வது கொண்டாட்டம், குடியரசு தினத்தை கொண்டாடும் எண்ணிக்கையைக் குறிக்கிறது.