Somavara Vratham 2024: கார்த்திகை முதல் சோமவாரம் 2024: தெய்வத்தை, எப்படி வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு நடைபெறும் சங்காபிஷேகம் தான், கார்த்திகை மாத சோம வாரம் சங்காபிஷேகம் ஆகும்.

Somavara Vratham (Photo Credit: LatestLY)

நவம்பர் 21, சென்னை (Festival News): சோம வாரம் இனிய சிவனுக்கு உகந்த நாள் என்பதால் ஆலயங்களில் சிவனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் கார்த்திகை மாத சோம வாரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்பதால் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். அதன்படி கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (Somavaram) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

வழிபாட்டு முறைகள்: 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டுகின்றனர். எனவே திங்கட்கிழமையில் அருகில் இருக்கும் சிவத்தலங்களில் சிவபெருமானையும், உமையாளையும் வணங்கி சோம வார தினத்தில் இறைவனின் அருளை பெறுவோம். எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட, சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது. சங்காபிஷேகத்தை கண்குளிரக் கண்டு இறைவனை வழிபடுவதால் மலமாசுகள் நீங்கும். சகல செல்வம் மிக்க பெருவாழ்வு கைகூடும்.

கார்த்திகை சோம வார தினத்தில் சிவனையும், விஷ்ணுவையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும், அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும். World Television Day 2024: உலக தொலைக்காட்சி தினம் இன்று: வரலாறு என்ன?!

சோம வார விரதம் இருக்கும்போது செய்ய வேண்டியவை:

சோம வார விரத பலன்கள்: