நவம்பர் 21, சென்னை (Special Day): உலகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் அவசியம் இருக்கும் ஒரு சாதனம் என்றால் அது தொலைக்காட்சிதான். பொழுதுபோக்கை வீட்டிற்கே அழைத்து வந்தது தொலைக்காட்சிதான். தொலைக்காட்சி நமது மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு அழகாக மாற்றியமைத்து பல ஆண்டுகளாக பொருத்தமானதாக உள்ளது. அந்த வகையில் உலக தொலைக்காட்சி தினம் (World Television Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது.
வரலாறு: முதல் மின்சாரத் தொலைக்காட்சி 1927 ஆம் ஆண்டில் பிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளரால் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஐ உலகத் தொலைக்காட்சி தினமாக கொண்டாடுவதாக அறிவித்தது. சமூகத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞரா நீங்கள்? தமிழ்நாடு அரசின் அசத்தல் கண்காட்சி.. கலந்துக்கோங்க., பரிசை வெல்லுங்க.!
முதல் பொது தொலைக்காட்சி ஒளிபரப்பு 1936 இல் இங்கிலாந்தின் லண்டனில் நடந்தது. இந்த ஒளிபரப்பில் பிரிட்டிஷ் மன்னரின் உரை பிபிசி மூலம் ஒளிபரப்பப்பட்டது. 1960 களில் வண்ணத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது, 1980-களில் கேபிள் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது, இது அதிக சேனல்களை வழங்கியது. 1959 ஆம் ஆண்டு இந்தியாவில் தொலைக்காட்சி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது தூர்தர்ஷன் ஒளிபரப்பத் தொடங்கியது. தற்போது இந்தியாவில் சினிமாவை விட பெரிய துறை தொலைக்காட்சித் துறை தான்.