International Day against Drug Abuse and Illicit Trafficking: "விஷத்தை அமுதாய் விழுங்கிட எப்படி முடிகிறது?" சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

International Day against Drug Abuse and Illicit Trafficking (Photo Credit: Pixabay)

ஜூன் 26, புதுடெல்லி (New Delhi): உலக அளவில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் (International Day against Drug Abuse and Illicit Trafficking) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐ.நா சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூன் 26-ம் தேதியை சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக அங்கீகரித்தது. போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. How to Move On After One-Sided Love: "உண்மையான காதல் என்றும் மறைவதில்லை".. ஒருதலைகாதலில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?.. வழிமுறைகள் இதோ.!

போதைப் பொருள் தடுப்பு: போதைப் பொருள் பயன்படுத்தும் ஒருவர் தனது சுயக் கட்டுப்பாட்டில் இருப்பதே கிடையாது. எனவே அவரால் சுயமாக சிந்திக்கவும் முடியாது. மனச்சிதைவு, உடல் நலக் கோளாறு, நாள்பட்ட நோய்கள் போன்றவை தான் போதைப் பொருள் பயன்பாடு நமக்கு தரும் பரிசுகள். சர்வதேச ஆய்வுகளின் படி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் அதிகமானோர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. மது, சிகரெட், கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற போதைப்பொருள்கள் இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. இதற்கு போதைப்பொருள் பயன்பாட்டுத் தீங்குகளைத் பற்றிய புரிதலை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். இதன் மூலம் போதைப் பொருள் பழக்கத்தை பரவ விடாமல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.