Mushroom Cultivation: ரூ.1000 இருந்தாலே போதும்.. காளான் வளர்ப்பு தொழில் தொடங்கலாம் வாங்க.. விபரம் உள்ளே..!
குறைந்தபட்ச முதலீட்டில் கணிசமான வருமானத்தை அளிக்கும் உங்களின் சொந்த தொழில்முனைவு பயணத்தை நீங்கள் தொடங்க விரும்பினால், இந்த தோட்டக்கலை தயாரிப்பு சாகுபடியை நீங்கள் தொடங்கலாம்.
நவம்பர் 26, சென்னை (Business Idea): உணவில் காளான் (Mushroom) சேர்ப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. அதிக சத்து உள்ளதால் காளான் பிரியாணி முதல் காளான் ஃப்ரை என பல விதவித உணவுவகைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இந்த காளானை வளர்ப்பது (Cultivation) மூலம் நீங்கள் நல்ல லாபத்தையும் ஈட்டலாம்.
முதலீடு:
இந்த தொழில் ஒரு காய்கறி விவசாயம் போன்றது, முதலீடு என்பது ரூ.1000 ரூபாயிலும் தொடங்கலாம். முதலீடு என்பது நாம் எத்தனை படுக்கை செய்கின்றோமோ அதை பொறுத்து மாறுபடும். ஒரு காளான் படுக்கை செய்ய தேவையான செலவு ரூ.40- 50 வரை ஆகும். காளான் வளர்ப்புக்கு 10*10 ரூம் அல்லது குடில் தயார் செய்ய வேண்டும். பின்னர், காளான் விதை, பாலிதீன் பை, வைகோல், தண்ணீர் குறைந்த பட்சம் 100 லிட்டர் ஒரு நாளைக்கு, வைக்கோலில் உள்ள கிருமிகளை அழிக்க பார்மோலின், பெவிஸ்டின் கெமிக்கல் போன்றவைகள் உங்களுக்கு தேவையானவைகள் ஆகும். Constitution Day 2024: இந்திய அரசியலமைப்பு தினம்.. இந்த நாளின் வரலாறு என்ன தெரியுமா?!
செய்முறை:
வைகோலை பதப்படுத்த வேண்டும். அதற்கு இரண்டு முறை உள்ளது. முதலில் வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இரண்டு முறை உள்ளது. அவை கொதி நீரில் அவித்தல் முறை, ரசாயனம் பயன்படுத்தி பதப்படுத்தல் முறை ஆகும்.
கொதி நீரில் அவித்தல் முறை: இது சிறிய அளவில் காளான் உற்பத்திக்கு உரியது. நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து. இதனை ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும் இது முதல் முறையாகும்.
ரசாயனம் பயன்படுத்தி பதப்படுத்தல் முறை: இது பெரிய அளவில் காளான் உற்பத்திக்கு உரியது. நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து. அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும், இது இரண்டாவது முறையாகும். Benefits of Brinjal: இதய நோய் சரியாக, நோயெதிர்ப்பு சக்தி கிடைக்க அருமருந்தாக கத்தரிக்காய்; அசத்தல் நன்மைகள் இதோ.!
காளான் வளர்ப்பு தொழில்:
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி, வைகோலில் உள்ள கிருமிகளை அழித்த பிறகு, தண்ணீரை வடிகட்டி உலரவைக்கவும் . ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.
இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக்கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.