நவம்பர் 26, சென்னை (Health Tips): இந்திய சமையல் அறைகளில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ள கத்தரிக்காய் (Brinjal Benefits In Tamil), பச்சை மற்றும் ஊதா நிறங்களில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஹைபிரிட் சார்ந்த கத்தரிக்காய்களும் (Kathirikai Nanmaigal) விற்பனைக்கு வந்துள்ளன. கத்தரிக்காயை குழம்பு, பொரியல் என பல வகைகளில் செய்து சாப்பிடலாம். கத்தரிக்காய் இருக்கும் ப்ரீ ராடிக்கல்ஸ் செல்களை சேதப்படும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.
இரத்த அழுத்தம் சமப்படுத்தப்படும்:
நமது உடலில் அதிகம் சேரும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்ட கத்தரிக்காயை, அவ்வப்போது நாம் உணவில் சேர்த்துக்கொண்டால், உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் அழுத்தமும் சமப்படுத்தப்படும். இதனால் இதய நோய் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும். மூளை திறன் மேம்படுத்தப்படும், நினைவாற்றலையும் அதிகரிக்க கத்தரிக்காய் உதவுகிறது. பாலிசைத்தீமியா எனப்படும் பாதிப்பு இருப்போருக்கு அதிகம் இரும்புசத்து இருக்கும் என்பதால், அப்பிரச்சனை உடையோருக்கு கத்தரிக்காய் வரப்பிரசாதம் ஆகும். Poondu Chutney Recipe: ஆரோக்கியமான பூண்டு சட்னி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
நச்சுத்தன்மையை நீக்கும்:
உடலுக்கு தேவையான வைட்டமின் சி-ஐ அதிகம் வழங்கி, உடலை நோயெதிர்ப்பு சக்தியுடன் வலுப்படுத்தி, பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கத்தரிக்காய்க்கு உண்டு. புகைப்பழக்கம் கொண்டவர்கள், அதனை நிறுத்த கத்தரிக்காயை சாப்பிடலாம். வைட்டமின் நிறைந்த, நார்சத்து கொண்ட காயான கத்தரிக்காய், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மையையும் நீக்கும். உடலின் தலைப்பகுதியை ஈரத்துடன் வைக்க உதவுதல், உரோம வளர்ச்சிக்கு உதவி செய்தல் என கத்தரிக்காயில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.
கத்தரிக்காயை குழம்பில் சேர்த்து சாப்பிட விரும்பும் இல்லாதோர் அவியல், பொரியல் என மாறுபட்ட சுவையுடன் சமைத்தும் சாப்பிடலாம். சிலருக்கு கத்தரிக்காய் அரிப்பு போன்ற ஒவ்வாமையை வழங்கும், அவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.