நவம்பர் 26, சென்னை (Special Day): நம் நாட்டில் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுக்கூறும் வகையிலும் சட்டம் இயற்றுவதற்கு துணைபுரிந்தவர்களை போற்றுவதற்காகவும் 2015 லிருந்து இந்திய அரசியலமைப்பு தினம் (Constitution Day) கொண்டாடப்படுகிறது. 1949 நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் 1950 ஜனவரி 26ல் தான் நடைமுறைக்கு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சட்ட வரையரை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிப் பெயர்க்கப்பட்டது. அம்பேத்கரின் தலைமைகீழ் உருவான கையாள் எழுதப்பட்ட நம் நாட்டிற்கான சட்ட சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் நவம்பர் 26 உடன் 73 ஆண்டுகளை அடைகிறது.
இந்நாளின் முக்கியத்துமாக இருப்பது, நமது அரசியலமைப்பு சட்டத்தின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அம்பேத்கரின் லட்சியங்களையும் சிந்தனைகளையும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவதுமே. இருப்பினும் இன்றுவரை சட்டங்களில் திருத்தங்களும் நடைமுறைக்கு ஏற்றார்போல் புது சட்டங்களும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. November 25 Special Day: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று..!
சட்டமும் சமத்துவமும்:
சட்டத்தின் கீழ் அனைவரும் சமமே. என்ன தான் மத, தல சட்டங்கள் தனித்தனியாக இருந்தாலும் இந்த சட்டதின் கீழ் அனைத்து இந்திய மக்களும் சமமே. சட்டத்தின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து துறைகளும் மக்களும் இருக்க வேண்டும். இதனால் சட்டங்கள் மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் பொருள் அல்ல. மாறாக இது மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது. மேலும் சம உரிமையைப் பெற்றுத் தருகிறது. ஏனெனில் நம் நாட்டில் மதம், இனம், மொழி, சாதி என பல பாகுபாடுகளும் ஏற்ற இறக்கங்களும் இருக்கும் நிலையில் இந்திய தேசத்திற்கும் சட்டத்திற்கும் கீழ் மட்டுமே அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறோம். சட்டத்தின் முன் குற்றவாளி, நிரபராதி மட்டுமே வேறு பாகுபாடே கிடையாது.
அடிப்படை உரிமைகள்:
ஒரு இந்திய குடிமகன்/குடிமகளின் அடிப்படை உரிமைகளை எக்காரணத்திற்காகவும் மறுக்கவோ பறிக்கவோ கூடாது என்கிறது இந்திய சட்டம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியக் குடிமக்களின் உரிமைகள் பற்றி பிரிவு III ல் சரத்துக்கள் 12 முதல் 35 வரை கூறுகிறது. சமத்துவ உரிமை, கருத்துரிமை (பேச்சுரிமை, எழுத்துரிமை) சுரண்டலுக்கு எதிரான உரிமை, மதம் பின்பற்றுதல் உரிமை, கலாச்சார மற்றும் கல்வி உரிமை, நீதி உரிமை இந்த ஆறு அடிப்படை உரிமைகளும் இந்திய நாட்டில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டியவையாகும்.