MILK CAKE RECIPE: சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி... பால் கேக் செய்வது எப்படி ?
ஸ்நாக்ஸ் ரெசிபியான பால் கேக் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி 09, சென்னை (Chennai): தினமும் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவீர்கள். ஆனால் ஒரே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. மேலும் பால் குடிப்பது என்பது பல குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அதில் அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளது. பால் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ரெசிபியாக இருக்கும்.
தேவையான பொருள்கள்
சர்க்கரை- 7 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – 2 டிஸ்பூன்
தண்ணீர் – 2 டம்ளர்
பால் – 2 கப்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டை உடைத்துச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்குச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அதில் இரண்டு டம்ளர் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாகச் சர்க்கரை கரையும் வரை கிளறவும். சர்க்கரை கரைந்த பிறகு, அதை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
அதற்குப் பின், அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் கலக்கிய முட்டை மற்றும் இரண்டு கப் அளவிற்குப் பால் சேர்க்கவும். அதில் 2 டிஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்குச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை நன்றாகக் கொதிக்க வைக்கவும். பால் நன்றாகக் கொதித்ததும் அதை முன்பாக, காய்ச்சிய பாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். Mother Kills Son In Goa: 4 வயது மகனைக் கொன்ற கொடூர தாய்.. காவல்துறையினரால் கைது... பரபரப்பு சம்பவம்..!
ஒரு இட்லி பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து அதில் நாம் கலக்கிய கலவை உள்ள பாத்திரத்தை எடுத்து அதில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். இதை 10 முதல் 20 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் பால் கேக் தயார்.