ஜனவரி 09, கோவா (Goa): கர்நாடாக மாநிலம், பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பணியாற்றி வருபவர் சுச்சனா சேத் (வயது 39) (Suchana Seth). இவருக்கு 4 வயதில் மகன் உள்ளது. இவர் கோவாவில் கடந்த சனிக்கிழமை அந்த விடுதியில் அறை எடுத்து தங்கினார். அப்போது அவருடன் அவரது 4 வயது மகனையும் அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து இவர் விடுதி அறையைக் காலி செய்யும்போது, தனது மகன் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், பெங்களூரு செல்ல வாடகை கார் ஏற்பாடு செய்து தருமாறும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சுச்சனா சேத்திற்கு ஓட்டல் நிர்வாகம் வாடகை கார் ஏற்பாடு செய்து தந்துள்ளது.
மகனைக் கொன்ற கொடூர தாய்: பின்னர் அவர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய விடுதியில் பணிபுரிபவர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு ரத்தம் இருப்பதனை கண்டு சுச்சனாவை தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் அவர் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. பின்னர் அவர்கள் கோவா காவல்துறையிடம் இச்சம்பவத்தினை தெரிவித்துள்ளனர். கோவாவின் கலங்குட் காவல்துறையினர், வாடகை கார் ஓட்டுநரை செல்போனில் தொடர்புகொண்டு, சுச்சனா சேத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளனர். Unity Layoff: 1300 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குகிறது யூனிட்டி நிறுவனம்.. அடுத்தடுத்து தொடரும் வேலையிழப்புகள்.!
இதையடுத்து கார் ஓட்டுநர், கர்நாடகா மாநிலம், சித்திரதுர்கா மாவட்டம், ஐமங்கலா காவல் நிலையத்தில் சுச்சனாவை ஒப்படைத்தார். அப்போது காவலர்கள் அவரது சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் அவரது 4 வயது மகன் கொலை செய்து அடைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்னர். மேலும் சுச்சனா சேத்தை கைது செய்தனர். சுச்சனா சேத் எதற்காக தனது மகனை கொன்றார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Panaji: On the murder of a four-year-old boy in Goa, North Goa SP Nidhin Valsan says, "A woman asked the hotel staff to arrange a taxi for Bengaluru...After the checkout, when the hotel staff went to clean the room, they found red-coloured stains which they assumed to be… pic.twitter.com/TqqOyuqwfv
— ANI (@ANI) January 9, 2024